கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் சிம்பு!

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் சிம்பு!
X
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கிறார் என்கிறத தகவல் வெளியாகியிருந்தது.

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கிறார் என்கிறத தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஹெச் வினோத் மற்றும் நாக் அஸ்வின் படங்களிலும் நடிக்க இருக்கிறாராம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாகவே உறுதியாகிவிட்டது. அநேகமாக அந்த படத்தின் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஹெச் வினோத் இயக்கத்தில் விவசாயம் தொடர்பான ஒரு படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்துதான் கமல்ஹாசன் மணிரத்னம் இணையும் படம் உருவாக இருக்கிறதாம். அந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்புவும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது நடிக்கும் எல்லா படங்களும் மல்டி ஹீரோ படங்களாகவே இருக்கின்றன. முதலில் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து இப்போது ஹெச் வினோத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சனும் இருக்கிறார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் உருவாக இருக்கிறது. இதில் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் அல்லது வேறு இந்தி நடிகரும், தமிழ் பதிப்பில் சிம்புவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிம்பு முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!