நயன்தாரா இல்லையாம்பா! முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை!

நயன்தாரா இல்லையாம்பா! முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை!
X
கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில், அது தவறான தகவல் எனவும் அந்த படத்தில் குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதுவும் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில், அது தவறான தகவல் எனவும் அந்த படத்தில் குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதுவும் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் ஒரு படத்தில் இணைய மாட்டார்களா என இந்திய சினிமா ரசிகர்களே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விசயம் தற்போது நடக்கப்போகிறது. அதுவும் இந்த வருட பாதியிலேயே அந்த கனவு கண் முன்னே நடக்கப் போகிறது. KH234 படத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம். | kamal haasan 234 movie name

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து நாயகன் மாதிரி வேறொரு படத்தைத் தர தயாராகிவிட்டார்கள். ஆனால் இம்முறை மிகப் பெரிய கமெர்ஷியல் சக்ஸஸ் வேண்டும் என எதிர்பார்த்து இணைந்திருக்கிறார்கள். | kh234 mani ratnam

முன்னதாக கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய கமெர்ஷியல் சக்ஸாக அமைந்தது. இப்போது நடித்து வரும் இந்தியன் 2 படமும் நிச்சயம் உலகம் முழுக்க மிகப் பெரிய வரவேற்பை பெறப்போகிறது. இந்த வகையில் அடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். அடுத்து மணிரத்னம் படத்தில் மிகப்பெரிய அளவிலான பிசினஸுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் என தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டபடி நயன்தாராவிடம் இதுகுறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது. | kh234 story

மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஷாருக்கான் இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என முன்னதாக கூறப்பட்டது. ஆனால் மோகன்லால் ரஜினியுடன் ஜெய்லர் படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். கமல்ஹாசன் - மம்மூட்டி இருவரும் இணைந்து நடிக்க பல ஆண்டுகளாக பேசி வந்தாலும் அதற்கான ஸ்க்ரிப்ட் எதுவும் சரியாக அமையவில்லை. அதேநேரம் ஷாருக்கான் ஏற்கனவே கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய தில்சே படத்தில் நாயகனாக ஷாருக்கான் நடித்திருப்பார். | kh234 heroine

இந்நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்துக்கான கதையை இறுதி வரையறை செய்துவிட்டார் எனவும் விரைவில் ஷூட்டிங் லொகேஷன் காண செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், இது மிகப் பெரிய பிசினஸ் செய்யும் படம் என்பதால் பாலிவுட் கதாநாயகியைத் தான் தேர்ந்தெடுப்பார் மணிரத்னம் என்று சிலர் பேசியிருந்தனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கமல்ஹாசனுடன் மணிரத்னம் பேசி இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க வைத்தால் எப்படி என்பதை ஆலோசித்திருக்கிறாராம். | kamal haasan 234 movie heroine

தமிழ் மற்றும் ஹிந்தி என இருமொழிகளிலும் இந்த படம் உருவாகும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே விக்ரமை வைத்து ராவணன் படத்தை அப்படி இயக்கியிருப்பார் மணிரத்னம். அந்த படத்தில் விக்ரம் தமிழிலும், அபிஷேக் பச்சன் ஹிந்தியிலும் ஹீரோவாக நடித்திருப்பார்கள். ஆனால் கமல்ஹாசனுக்கு ஹிந்தியிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இரு மொழிகளிலும் கமல்ஹாசனை வைத்தே எடுக்கலாம் என்று நினைக்கிறார்களாம். மேலும் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இந்த படத்தை டப் செய்து வெளியிடலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார்கள். | kh234 movie release date

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு