கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கமல்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் கமல்
X

சிகிச்சை அளித்த மருத்துவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட கமல்.

கொரொனா தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று வீடு திரும்பினார்.

அண்மையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

கமல் விரைவில் குணமடைய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். கமல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக, கடந்த வாரம் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்த சூழலில், தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நடிகர் கமல், இன்று மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, வீடு திரும்பினார். இதனால், கமல் ரசிகர்களும், மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!