விக்ரம் படத்தை பான் இந்தியா படமாக்க கமல் முயற்சி

விக்ரம் படத்தை பான் இந்தியா படமாக்க கமல் முயற்சி
X

கமல்ஹாசன்

விக்ரம் படத்தை பான் இந்தியா மூலம் பல மொழி ரசிகர்களால் கொண்டாடும் படமாக மாற்ற கமல் அதிக முனைப்பு காண்பித்து வருகிறாராம்

தமிழில் இருந்து சொல்லிக் கொள்ளும் படியாக பான் இந்தியா படங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் பான் இந்தியா மட்டுமல்ல உலகளவிலும் வசூல் சாதனை நடத்தி வருகின்றன. எனவே கமல் புரொடக்‌ஷனில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தையும் பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக மாற்ற கமல் அதிக முனைப்பு காண்பித்து வருகிறாராம்.


அதையொட்டி இப்படத்தின் படத்தின் இசை வெளீயீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டு வருகிறார்களாம். மே முதல் வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். அதற்குப் பிறகு கமல் உலகின் பல நாடுகளுக்கும் சென்று விக்ரம் படத்தை விளம்பரம் செய்யவிருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படம் உருவாகி இருக்குது. இப் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காய்ங்க.

விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கார்.

மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் இதில் கமலின் மகனாகவும். ஸ்வஸ்திகா கிருஷ்ணன், நரேன், மலையாள நடிகர் சேம்பன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிச்சிருக்காய்ங்க.

Tags

Next Story