நூறு மடங்கு பிரம்மாண்டம்... 3 வருஷம் ஆகுமாம்! கல்கி 2 அப்டேட்!

நூறு மடங்கு பிரம்மாண்டம்... 3 வருஷம் ஆகுமாம்! கல்கி 2 அப்டேட்!
X
நூறு மடங்கு பிரம்மாண்டம்... 3 வருஷம் ஆகுமாம்! கல்கி 2 அப்டேட்!

கல்கி 2 எப்ப ரிலீஸ் ? | Kalki 2 Release Date

பாகுபலி படத்தின் மூலம் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரபாஸ், அதன் பின்னர் பான் இந்தியா நட்சத்திரமாக பல கோடி ரசிகர்களின் கனவு நாயகனாக உயர்ந்தார். ஆனால் அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. ஆனால், அந்த ஏமாற்றங்களை எல்லாம் துடைத்தெறிந்து மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறது 'கல்கி 2898 ஏ.டி'. பிரமாண்டமான தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே போன்ற நட்சத்திர பட்டாளமே பங்கேற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் உச்சத்தில், 'கல்கி 2898 ஏ.டி'யின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. முதல் பாகத்தில் சில நிமிடங்களே தோன்றிய கமல்ஹாசனின் கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளதாம். இப்படத்தின் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, 2025ல் தொடங்கும் படப்பிடிப்பு 3 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும், அதனால் படம் 2028ல் தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட பல மடங்கு அதிரடி திருப்பங்களும், ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன என்று தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார். கல்கியின் இந்த காவியம் மீண்டும் திரையில் எப்போது விரியும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 2028ல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை படைக்குமா 'கல்கி 2898 ஏ.டி 2'? பொறுத்திருந்து பார்ப்போம்!

Tags

Next Story