'காளி' பட சர்ச்சை… லீனா மணிமேகலை மீது உ.பி. போலீஸார் வழக்கு..!

காளி பட சர்ச்சை… லீனா மணிமேகலை மீது உ.பி. போலீஸார் வழக்கு..!
X

சர்ச்சைக்குரிய போஸ்டர்.

Police Case- லீனா மணிமேகலை இயக்கியுள்ள 'காளி' ஆவணப்பட போஸ்டர் எந்ற்படுத்திய சர்ச்சை இன்னும் ஓயவில்லை. லீனா மீது வழக்குப் பதிவு.

Police Case- ஓரினச் சேர்க்கை கொடியுடன் புகைப் பிடிக்கும் விதமாக காளி தெய்வத்தை சித்திரித்து இயக்குநர் லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டருக்காக, அவருக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்தநிலையில், காளி தெய்வம் வேடமணிந்த பெண் ஒருவர் ஓரின சேர்க்கை கொடியுடன் புகைப் பிடிக்கும் போஸ்டரை வெளியிட்ட லீனா மணிமேகலை மீது உ.பி. போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் டெல்லி போலீசாரும் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"காளி" போஸ்டரால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை தனது விளக்கத்தை, "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருக்க விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து,தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும், "ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப்பார்த்தா 'arrest leena manimekalai' hashtag போடாம 'love you leena manimekalai' hashtag போடுவாங்க என பதிவிட்டுள்ளார். ஆயினும், ஓயாமல் இணையத்தில் 'காளி' போஸ்டர் குறித்த சர்ச்சை பூதாகரமாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!