உடல் மெலிந்த காஜல் அகர்வால்... வைரலாகும் வீடியோ!

உடல் மெலிந்த காஜல் அகர்வால்... வைரலாகும் வீடியோ!
X
திருமணமாகிவிட்டாலே நடிகைகள் மார்க்கெட் இழப்பார்கள் என்கிற காலம் போயி, காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதால் தனது உடல் எடையை மீண்டும் குறைத்துள்ளார்.

திருமணமாகி குழந்தை பெற்றெடுத்ததன் காரணமாக சற்று உடல் எடை கூடி இருந்த காஜல் அகர்வால் தற்போது அதனை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மீண்டும் வந்திருக்கிறார்.

நடிகைகள் கொஞ்சம் எடை கூடிவிட்டாலும் கூட அதனை உலகமே ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதைப் போல பேசும். ஒரே ஒரு விதிவிலக்கு அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றெடுத்தால் மட்டுமே. அப்போதும்கூட படவாய்ப்புகள் குறைந்து சில சமயங்களில் மார்க்கெட் இழந்து வெளியேற நேரிடும். இதனாலேயே பல நடிகைகள் 35, 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் தொடர்ந்து சினிமாவில் இருந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழநி படம் மூலம் அறிமுகமானவர், அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், கமல்ஹாசன் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேரத் தொடங்கினார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த காஜல் அகர்வாலுக்கு அவரது குடும்ப நண்பர் கவுதம் கிச்லூவுடன் நெருக்கம் ஏற்பட நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களது திருமணம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய காஜல் அகர்வால், இந்தியன் 2 வில் மட்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியே வர, அந்த படத்திலிருந்தும் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த இணையருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவரது சமூக வலைத்தள கணக்கில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். குழந்தை பிறந்ததால் உடல் எடை கூடி சற்று பெருத்த உடலுடன் காட்சியளித்தார் காஜல்.

திருமணமாகிவிட்டாலே நடிகைகள் மார்க்கெட் இழப்பார்கள் என்கிற காலம் போயி, காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருவதால் தனது உடல் எடையை மீண்டும் குறைத்துள்ளார்.

தான் திருமணத்துக்கு முன்னர் இருந்தபடி ஆக விரும்பிய காஜல், இப்போது உடல் எடையை குறைத்து பழையபடி ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துகொண்ட காஜலின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இவர் ஸ்லிம்மாக இருப்பது தெரியவந்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்