/* */

கோவையில், விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம்

Vallalar Velaivaippu Sevai Iyakkam-கோவையில், டிச,2,3,4ம் தேதிகளில், நடிகர் விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

HIGHLIGHTS

கோவையில், விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம்
X

job fair camp by vijay sethupathi in coimbatore  - நடிகர் விஜய் சேதுபதி.

Vallalar Velaivaippu Sevai Iyakkam-இந்தியாவில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மற்றும் KGISL Educational Institutions கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கம் 3 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது ஆகும்.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்ற நடிகராகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல நற்பணிகளும் செய்து வருகிறார். மேலும் அவரது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பில், இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடித் தரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில், இப்போது கோவை மாநகரில் பிரமாண்டமாக இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் இந்தியாவை சார்ந்த அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 2022- டிசம்பர் மாதம் 2,3,4 ம் தேதிகளில் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 செக்டர்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை தேடும் இளைஞர்கள் / நிறுவனங்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். இதில் எந்த கட்டணமும் இல்லை. முழுக்க சமூக சேவையாகவே நடைபெறுகிறது.

கடந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் 50 நிறுவனங்களுடன் ஆயிரத்திற்கும் மேலான வேலை தேடும் நபர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த சேவை ஒருநாள் வேலை வாய்ப்பு சேவையாக அல்லாமல், வருடத்தின் அனைத்து நாட்களும் இந்த இயக்கத்தின் சேவை மக்கள் செல்வன் வழியில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் இது நாள் வரை 1,20,243 நபர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

வழக்கமாக, தங்களது ரசிகர்கள் மன்றங்கள் வாயிலாக, நடிகர்கள் பலரும் தங்களது வளர்ச்சியை மேம்படுத்தி கொள்வதுதான், தமிழ் சினிமா உலகில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், வித்தியாசமாக, தனக்கு வாழ்வளித்த மக்களுக்காக, ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, அவர்கள் வளர்ச்சிப்பாதையில் செல்ல உதவும் நடிகர் விஜய் சேதுபதி, உண்மையிலலேயே மக்கள் செல்வன்தான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 5:51 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு