தீபாவளி ரேஸில் ஜிகர்தண்டா 2!

Jigarthanda 2 Release Date
X

Jigarthanda 2 Release Date

Jigarthanda 2 Release Date-ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Jigarthanda 2 Release Date-ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு ரௌடிசம் செய்து வரும் பாபி சிம்ஹா குறித்து படம் எடுக்க வந்த இயக்குநராக சித்தார்த் நடித்திருப்பார். அவர் மிகப் பெரிய ரௌடியை காமெடியனாக்கி அவரைப் பார்த்து ஊரே சிரிக்கும்படி செய்துவிடுவார்.

இந்நிலையில் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மிக அசத்தலான கெட்டப்பில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இதில் மிகவும் வித்தியாசமாக கௌ பாய் பட பாணியில் இந்த கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர், கார்த்தி நடிப்பில் ஜப்பான், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது படமாக இந்த படமும் ரிலீஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் அவர்களுக்கு மினிமம் கேரண்டி படமாக அவை அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் கதையை மட்டுமே நம்பி படத்தை இறக்குகிறார். இதனால் அவரின் துணிச்சலை கோலிவுட் மெச்சி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!