ஜிகர்தண்டா படத்தின் சூப்பர் அப்டேட்!

ஜிகர்தண்டா படத்தின் சூப்பர் அப்டேட்!
X
ஜிகர்தண்டா படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிகர்தண்டா படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம், மகான் திரைப்படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிகர்தண்டா 2. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் அறிமுக டீசர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யாவின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்களின் ஸ்டைலும் , காம்பினேசனும் வித்தியாசமாக இருப்பதாகவும், இந்த படம் நிச்சயம் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் ஆரம்ப காலத்தில் எடுத்த வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் இது.

கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி கோலிவுட்டை மட்டுமல்லாது இந்திய சினிமா உலகையே கலக்கிய படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் மற்ற மொழி பதிப்புகளில் வெளியிட நிறைய போட்டிகள் இருக்கின்றன. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் இது.

வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த திரைப்படம், பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்த படம் வெளியாகி 8 வருடத்தை கடந்த தினத்தன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு இருந்தது. இதனால் ரசிகர்கள் குஷியாகினர். சந்தோஷ் நாராயணன் இசையில், மிகவும் வித்தியாசமான கதையாக அமையும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது என தெரியவந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டு வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறதாம். எஸ்ஜே சூர்யாவுக்கான போர்சன்கள் கிட்டத்தட்ட அனைத்துமே முடிக்கப்பட்டு விட்ட நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!