அடுத்தடுத்து வெளியாகும் ஜெயம் ரவி படங்கள்! மாமியார் படமும் ரெடி!

அடுத்தடுத்து வெளியாகும் ஜெயம் ரவி படங்கள்! மாமியார் படமும் ரெடி!
X
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் சேர்ந்து நடிக்கும் புதிய படம் சைரன். கடந்த ஆண்டு துவங்கிய இந்த படம், இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

ஜெயம்ரவி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அவருடன் விக்ரம், கார்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய், திரிஷா என இரண்டு பேரழகிகள் இருந்தாலும் ஜெயம் ரவிக்கு படத்தில் ஜோடியாக ஷோபிதா என்பவர் நடித்திருக்கிறார்.

முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள, அகிலன் திரைப்படமும் முடிந்து திரையரங்குகளில் வரும் மார்ச் 10ம் தேதி முதல் திரையிடப்படவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி ஷங்கர், ஹரிஸ் உத்தமன், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது. ஜெயம் ரவியும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில்தான், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படமும் முடிவடையவுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகள், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் காம்பினேசன் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும் சில மற்ற காட்சிகளும் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரித்துள்ள இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மார்ச் மாதம் முதல் பாடல் வெளியாகும் எனவும், மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்களில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில், மே மாதம் சைரன் படமும் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தாமதமானால் ஜூன், ஜூலையில் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!