Jayam Ravi latest interview அம்மா மீது என்னா பாசம்! அடி பட்டதை மறைக்க ஜெயம் ரவி போட்ட நாடகம்!

Jayam Ravi latest interview அம்மா மீது என்னா பாசம்! அடி பட்டதை மறைக்க ஜெயம் ரவி போட்ட நாடகம்!
X
அம்மா உடனே கண்டுபிடிச்சிடுவாங்க. எப்பயாச்சும் டிரெஸ் நகரும்போது பாத்துட்டு இது எப்படா நடந்துச்சுன்னு வருத்தத்தோட கேப்பாங்க

கடைசியா ஜெயம் ரவியை நாம் பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திருப்போம். கிளைமேக்ஸ் காட்சியில் கடலுக்குள் குதித்த அருண்மொழி வர்மன், கிங்க் ஆஃப் இந்தியன் ஓசனாக அகிலன் படத்தில் வெளியே வருகிறார். ஆம் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

வழக்கமாகவே ஜெயம் ரவி ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க யோசிக்கமாட்டார் என்று கேள்விபட்டிருக்கிறோம். கோடம்பாக்கம் பாலத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மிக ரிஸ்கான அந்த காட்சியில் ஜெயம் ரவி நடித்திருப்பார். CBZ பைக்கில் அந்த ஸ்டன்ட் நடித்திருப்பார். அப்போவே இந்த பைக் ஸ்டண்ட் மீது ஆர்வம் இருந்ததா என அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, அப்போது அது ஆர்வக் கோளாறு இப்பதான் ஆர்வம் வந்திருக்கு என்று சிரித்துக் கொண்டே பேசினார்.

பைக் வாங்குன புதுசுல வீலிங்லாம் பண்ணி நாம என்னன்னமோ பண்ணுவோம்ல அதுமாதிரி காமெடிலாம் பண்ணிருக்கேன். ஃபிரண்ட் வீல் பாத்துருப்பீங்க பேக் வீல் பல்டி அடிச்சி பாத்திருக்கீங்களா என சிரித்துக் கொண்டே தன்னை கலாய்த்து பேசினார் ஜெயம் ரவி. என்னதான் இருந்தாலும் என்கிட்ட ஒரு சிறந்த குவாலிட்டி இருக்கு. அது என்னதான் அடி பட்டாலும் கீழ விழுந்தாலும் எதுவுமே நடக்காத மாதிரி வாட்ச்ச எடுத்து கட்டிக்கிட்டு ஹேண்ட்பார் பெண்டான பைக்க எடுத்துட்டு ஓட்டிட்டு வருவேன் என்று கூறினார். யாருக்கும் தெரியாமல் அப்படியே பார்க் பண்ணிட்டு அமைதியா போய் உக்காந்துடுவேன் என்று கூறினார்.

அடிபட்ட விசயம் வீட்டுக்கு தெரியாம எப்படி பாத்துக்குறதுன்னு யோசிச்சிட்டு, ஃபுல் ஸ்லீவ் போட்டுக்கிட்டு யாருக்கும் தெரியாம கெத்தா இருப்பேன். ஆனா சாப்பிடும்போது மட்டும் வலிக்கும். அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருந்துருக்காரு ஜெயம் ரவி. அம்மா இன்னிக்கு நீ ஊட்டி விடும்மா என்று கேட்பாராம். அவங்க அம்மாவும் பையனுக்கு நம்ம மேல என்னாபாசம் என்று வியந்து போவாங்களாம்.

ஆனாலும் அம்மா உடனே கண்டுபிடிச்சிடுவாங்க. எப்பயாச்சும் டிரெஸ் நகரும்போது பாத்துட்டு இது எப்படா நடந்துச்சுன்னு வருத்தத்தோட கேப்பாங்க. அம்மா அதுதான் ஆறிடிச்சே எதுவும் கேக்காதீங்கம்மான்னு சொல்வாராம் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் அம்மா உடனே இதுக்குதான் இவனுக்கு பைக் வாங்கி குடுக்காதீங்கன்னு சொன்னது. கீழ விழுந்து வாங்கிட்டு வந்திருக்கான் பாருங்கனு பல வேடிக்கைகள் நடந்துருக்கு. அப்ப ஆர்வக் கோளாறுல நிறைய பண்ணிருக்கேன். ஆனா இப்ப கொஞ்சம் ஆர்வமா பண்றேன்.

ஸ்டன்ட்ஸ்லாம் கத்துட்டுதான் வந்திருக்கோம். என்னால முடிஞ்சத கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பண்றேன். என்னால முடியலன்னா சொல்லிடுவேன். இது வராது எனக்குன்னு சொல்லிடுவதாக கூறுகிறார் ஜெயம் ரவி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!