மைனர் பெண்ணை....... ஜானி மாஸ்டரை வெளுத்து வாங்கிய சின்மயி..!
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி, மைனர் பெண்ணை வன்புணர்வு செய்ததாக பகிரங்கமான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரைப் பற்றி மேலும் பல விசயங்களைப் பேசியுள்ளார் பாடகி சின்மயி.
மலையாளத் திரையுலகைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய குற்றச்சாட்டு பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீதுதான். இளம் பெண் ஒருவர் இவர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பாடகி சின்மயி, குறிப்பிட்ட அந்த இளம்பெண் 16 வயதாக இருக்கும்போதே ஜானி அவரை வன்புணர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பற்றிக் கொண்டு எரிகிறது.
ஜானி மாஸ்டரின் உதவியாளர் | jani master assistant lady choreographer
டோலிவுட் முதல் கோலிவுட் வரை பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து முன்னணி நடன இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்துள்ளது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அல்லு அர்ஜூனின் புட்ட பொம்மா பாடல் முதல், விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவர் நடன அமைப்பாளராக இருந்துள்ளார். தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்துக்காக அவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
ஜானி டீமில் இருந்த பெண் நடனக் கலைஞரான அந்த பெண் தற்போது தனியே நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். 21 வயதான அந்த பெண் தற்போது துணிச்சலுடன் தனக்கு நடந்த கொடுமையை வெளியே கூறியிருக்கிறார். படப்பிடிக்குச் செல்லும் இடமெல்லாம் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ள அவர், சென்னை, ஹைதராபாத், மும்பை என அனைத்து இடங்களிலும் அவரின் ஆசைகளுக்கு இணங்க வைத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் ராய்துர்காம் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடகி சின்மயி இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது இல்லை 16 வயதாக இருந்தபோதே அதாவது அவர் மைனராக இருந்த போதே அந்த சிறுமியை தனது இச்சைகளுக்கு இணங்க வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளதுடன் அவருக்கு போராடும் வலிமை கிடைக்க வேண்டும் எனவும் வாழ்த்துவதாக டிவீட் செய்துள்ளார் சின்மயி.
ஜானி மாஸ்டரின் நடன உதவியாளர் | johnny master case girl name
42 வயதான ஜானி, அந்த பெண்ணிடம் மதம் மாறினால் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு ஆயிஷா எனும் மனைவியுடன் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. காதலிப்பது போல ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி இச்சைக்கு உட்படுத்தியிருக்கிறார் என அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜானி மாஸ்டர் பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இந்த புகாரைத் தொடர்ந்து அவர் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu