ஜனனி ஐயர்… இது என் பெயரல்ல… இனி நான் ஜனனி..!

ஜனனி ஐயர்… இது என் பெயரல்ல… இனி நான் ஜனனி..!
X

நடிகை ஜனனி.

Tamil Cinema Heroine - நடிகை ஜனனி ஐயர் தனது பெயரில் உள்ள ஐயர் என்பதை நீக்கியுள்ளார். 'இனி என் பெயர் ஜனனி' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Cinema Heroine - இயக்குநர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் நடிகை ஜனனி ஐயர். பாலா படத்தில் நடித்ததன் பலனாகப் பிரபலமடைந்த இவர், அதனைத் தொடர்ந்து 'தெகிடி', 'தர்மபிரபு', 'அதே கண்கள்' போன்ற படங்களிலும் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் குறிப்பிட்ட நடிகையாக வலம் வந்தார்.

அதோடு, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடுதலாகப் பிரபலமானார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், "நான் எனது பெயரில் உள்ள ஐயர் என்ற வார்த்தையை எப்போதோ நீக்கிவிட்டேன். இனி எனது பெயர் ஜனனி ஐயர் அல்ல. ஜனனி மட்டும்தான். இனி என்னை எல்லோரும் ஜனனி என்றே குறிப்பிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது, அறிமுக இயக்குநரான சந்தீப் ஷாம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'வேழம்' திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 24 ஆம் தேதியில் வெளிவர இருக்கும் நிலையில் படக்குழுவினர் தற்போது புரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . இப்படம் தனக்கு மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமையும் என்கிறார் நடிகை ஜனனி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story