/* */

முத்துவுக்கு ஆதரவாக ஜனனி.. வெளியான ப்ரோமாவுக்கு ரசிகர்கள் ஆதரவு

GP Muthu Bigg Boss 6 Tamil - பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக ஜனனி பேசம் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

முத்துவுக்கு ஆதரவாக ஜனனி.. வெளியான ப்ரோமாவுக்கு ரசிகர்கள் ஆதரவு
X

GP Muthu Bigg Boss 6 Tamil - பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக ஜனனி பேசம் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 9ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதில் அதிகப்படியாக 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரமாண்டமாக ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன், நிகழ்ச்சி தொடங்கிய 5 நாட்களிலேயே, ஒரு சில போட்டியாளர் ரசிகர்களுக்கு பரீட்சையும் இல்லாத முகங்களாக இருந்தாலும், அவர்களின் மத்தியில் பிரபலமாகத் தொடங்கி விட்டனர்.

மேலும் சமூகவலைதளங்களில் ஏற்கெனவே பிரபலமாகியுள்ள ஜி.பி.முத்துவும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். டிக்டாக்கில் பிரபலமான தனலட்சுமி, ஜி.பி.முத்துவுடன் பிரச்சனை ஏற்பட்டிருப்பது கதறி அழுதது ரசிகர்களிடையே மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போட்டியாளர் தனலட்சுமி, ஜி.பி.முத்து தன்னை நீ, நான் என அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை எனவும். மேலும் அவர் நடிக்கிறார் என ஆயிஷாவிடமும், கேமரா முன் சென்றும் குறை கூறிக் கொண்டிருந்தார். இதனைக் கேட்ட ஜி.பி.முத்து, கதறி அழுது நான் நடிக்கிறேனா? நண்பர்களே நான் நடிக்கிறேனா? இல்லை நிஜ கேரக்டரில் இருப்பேனா? என்பது என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். நான் எப்போதுமே இப்படித்தான்; என்னுடைய மகள் வயது இருக்கும் இந்தப் பெண் இப்படி என்னை பேசிவிட்டார் என கண்கள் கலங்கியபடி புலம்பி தீர்த்தார்.

இந்த நிலையில், ஜி.பி.முத்து கதறி அழுததைத் பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக போட்டியாளர் தனலட்சுமியை கிண்டலடித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜனனி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, எங்கள் டீமுக்கு யார் சூனியம் செய்தது எனத் தெரியவில்லை. ஜி.பி.முத்து சார் அவருடைய வயசுக்கு எதிர்த்துப் பேசியுள்ளார் என்றால், அவர் எங்களுக்கு அப்பா மாதிரி; நாம் வந்து அவர் ஒரு இடத்தில் கோபமாக இருக்கிறார் என்றால் பொறுமையாக போக வேண்டும். நீ நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை என்று தனலட்சுமியிடம் முகத்துக்கு நேராக பேசியிருக்கிறார் .

அதேபோல் ஜி.பி.முத்து கூறியது சரியாகத்தான் இருக்கிறது. அதனால் உன்னை ஸ்டாப் பண்ணுகிறேன் என்று தனலட்சுமியை பார்த்து ஜனனி கூறுகிறார். உடனே தனலட்சுமி அந்த இடத்தை விட்டு எழுந்து வேகமாக வெளியேறி சோபாவில் சென்று தனியாக அமர்ந்து கொண்டு அழுகிறார். அப்போது அவர், "உள்ளே வராமல் இருந்திருக்கலாம் பிக்பாஸ்" என்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தார். தனலட்சுமி, ஜிபி முத்து, ஜனனி என அனைவரும் பாத்திரங்களை வாஷ் செய்யும் அணியில் இருக்கும்போது, ஒரே அணியில் இருக்கும் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத்தான் ஜனனி இப்படி பேசி இருக்கிறார்.

முத்துவுக்கு ஆதரவாக ஜனனி பேசிய இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Oct 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!