Jailer விஜய் படத்தை முந்திய ஜெயிலர்! இப்படியும் ஒரு கணக்கு இருக்கா?
ஜெயிலர் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சாதனை படைத்துள்ளது. Jailer Vs Varisu Report அது விஜய்யின் வாரிசு படத்தை அடித்து நொறுக்கியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் பல சாதனைகளைப் படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையில் பாடல்களும், டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அட்வான்ஸ் புக்கிங் வெளிநாடுகளில் வேற லெவலுக்கு அதிகரித்து வருகிறது. இது விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களையும் தாண்டி வசூல் செய்துள்ளது.
விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட போது அட்வான்ஸ் புக்கிங் 147 ஆயிரம் டாலர்கள் வரை சென்றது.
அஜித்தின் துணிவு படத்துக்கு இந்த அட்வான்ஸ் புக்கிங் 100 ஆயிரம் அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்துக்கு இந்த அட்வான்ஸ் புக்கிங் 180 ஆயிரம் டாலர்கள் வரை வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பட வெளியீட்டுக்கு இன்னும் காலம் இருப்பதால் இது 200 முதல் 210 ஆயிரம் டாலர்கள் வரை ஆவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் இது படம் வெளியிடும் திரையரங்குகளையும் கணக்கில் கொண்டுதான் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஓவர்சீஸ் உரிமையை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளில் வெளியிட்டால் படத்தின் வசூலும் அதிகமாகும்.
இந்த வகையில் வெளிநாடுகளில் அதிக அட்வான்ஸ் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு ஜெயிலர் படம் இருக்கிறது. விக்ரம் படத்துக்கு ரிலீசுக்கு முன்பு அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்பதால் அதன் அட்வான்ஸ் புக்கிங் அளவு குறைவுதான் என்கிறார்கள். Vikram vs Jailer Report
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu