'ஜெயிலர்' ரஜினிகாந்த்..!

ஜெயிலர் ரஜினிகாந்த்..!
X
Rajini Latest Movie - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 169 படமாக சன் பிக்ஸர்ஸின் ' 'ஜெயிலர்' படம் உருவாகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

Rajini Latest Movie - நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தன் ரசிகர்களுக்கு 'விக்ரம்' எனும் பகட்டான விருந்து வைத்து, ஃபுல் ஃபில் கொண்டாட்டமாக்கினார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் நாளும் பொழுதும் நகரும் நொடிதோறும் தலைவரின் 169-வது படத்துக்கான தலைப்பு என்ன என்ன என்று எதிர்பார்த்து விரித்த விழி மூடாமல் கண்கொத்திப் பறவைக் கண்போல கோலிவுட்டின் இன்றைய செய்தி என்ன என்று அப்டேட்டாகக் காத்திருந்தனர்.

இந்தநிலையில்தான் 16/06/2022 அன்று ' ஜெயிலர்' என்கிற தலைப்பை வெளியிட்டது தங்கள் தலைவரின் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்கிற தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இதற்கு முன்பு இயக்கி வெளியான 'பீஸ்ட்' படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால், 'ஜெயிலர்' படத்தின் திரைக்கதையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அத்துடன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்த நிலையில், 'எந்திரன்' படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்தப் படத்தில் நடிப்பதை தன்னுடைய அண்மைப் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story