Jailer Latest Update ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
ஜெயிலர் படத்துக்காக கமல்ஹாசனாக மாறும் ரஜினிகாந்த்
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பறந்து பறந்து புரமோசன் செய்தது போல இந்தியா மட்டுமின்றி துபாய்க்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. ரஜினிகாந்தும் இந்த பயணத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர் ரிலீஸ் தேதி | Jailer Release Date
ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜெயிலர் பட இயக்குநர் | jailer movie director
ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
ஜெயிலர் பட நடிகர்கள் | jailer movie cast
நெல்சன் இந்த படத்தில் ரஜினியுடன் நிறுத்தவில்லை. மேலும் பல நடிகர்களையும் இணைத்திருக்கிறார். மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, பாலிவுட்டிலிருந்து ஜாக்கி செராப் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது இந்த படம்.
ஜெயிலர் படம்பிடிக்கப்படும் இடங்கள் | Jailer movie current shooting location
மங்களூருவில் வேகமாக வளர்ந்து வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ஷிவராஜ்குமார் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சுவாரஸ்யமாக சசிகலா காட்சியும் படத்தில் இருப்பதாகவும் இதனால் படத்துக்கு எதிர்ப்பு வருமா இல்லை சுவாரஸ்யமாக மாறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து கடந்த திங்கள்கிழமை மங்களூருக்கு பயணம் செய்தார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்து விடைபெற்றார் ரஜினிகாந்த்.
பலரும் ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்கிறார் என்றே நம்பினார்கள். மேலும் பல ஊடகங்களிலும் ஹைதராபாத்தில் ஜெயிலர் பட ஷூட்டிங் நடப்பதாக எழுதப்பட்டது. ஆனால் உண்மையில் அன்றைய தினம் மங்களூருக்குத் தான் சென்றார் ரஜினிகாந்த். மங்களூரிவில் பனம்பூர் கடற்கரையில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகின்றதாம். ரஜினிகாந்தும் ஷிவராஜ்குமாரும் அமர்ந்து பேசியதும் பனம்பூர் பகுதியிலிருக்கும் ஒரு ரிசார்ட்தானாம்.
ஜெயிலரில் சசிகலா காட்சிகள் | Sasikala scene in Jailer movie
மங்களூருவில் ரஜினி - ஷிவா காம்பினேசன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சுவாரஸ்யமாக சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் ஷாப்பிங் சென்ற விசயத்தை காமெடியாக சித்தரித்தோ அல்லது கிரைமாக யோசித்தோ வைத்திருக்கிறார்களாம்.
ஜெயிலராக இருக்கும் ரஜினிகாந்த், தப்பு செய்யும் அந்த அரசியல்வாதி செய்யும் அராஜகத்தை கண்டுபிடித்து தண்டிப்பது போல ஒரு காட்சி வருகிறதாம். இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
ரஜினிகாந்துடன் இந்த படத்தில் மோகன்லால், ஷிவராஜ்குமார் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் நடித்தாலும் அவர்கள் அவ்வப்போது வந்து செல்லும் வகையில்தான் கதை இருக்கிறதாம். முழு நேரமும் ரஜினிதான் படத்தில் மின்னுவார் என்கிறார்கள். ரஜினியின் அறிமுக காட்சியில்தான் இந்த சசிகலா விசயம் வருகிறதாம். பிரச்னை வராமல் இருக்க அதை ஆணாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது ஆண் அரசியல்வாதி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு ஜாலியாக வருவது போல காட்டியிருக்கிறார்களாம்.
ஜெயிலர் படத்தின் கதை | jailer movie story in tamil
ஜெயிலர் படத்தின் கதைப்படி, ஜெயிலரான ரஜினியைச் சுற்றியே கதை நகருமாம். வழக்கமான ஆக்ஷன் கதை போலவே அமைதியாக இருந்து அதிரடி காட்டும் நாயகனாக ரஜினிகாந்த் வருகிறாராம். மேலும் இதில் முழுக்க முழுக்க இரவு நேரத்திலான கதையே நடக்கும் என்கிறார்கள். படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆகி பின் வேகமெடுக்கும் என்றும், மற்ற மொழி நாயகர்கள் 5 நிமிட காட்சிகளுக்கே வருவார்கள் எனவும் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக அமையும் என்றும் கூறுகிறார்கள்.
ஜெயிலரான ரஜினிக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அதில் ஓர் இரவு அவரின் பாதுகாப்பில் இருக்கும் மிகப் பெரிய கைதி ஒருவரை காப்பாற்ற பல்வேறு குழுக்கள் திட்டமிடுகின்றன. ஆனால் ரஜினிகாந்த் தவிர வேறு யாராலும் அவரை வெளியில் கொண்டு வரமுடியாது என்கிற நிலையில், ரஜினிகாந்தை வைத்தே குறிப்பிட்ட நபரை வெளியில் கொண்டு வர வைக்கத் திட்டமிடுகிறார்கள். இப்படி நிகழ்த்தப்படும் திட்டத்தை முறியடித்து ரஜினிகாந்த் எப்படி தான் யார் என்பதை நிரூபிக்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் சம்பளம் எவ்வளவு | rajinikanth salary for jailer movie
நெல்சன் திலீப்குமார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும் என நீங்கள் கணிக்கிறீர்கள். விஜய்யை விட அதிகம் என்று நினைத்தால் அது தவறு. ரஜினிகாந்த், சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தப்படி இந்த படத்துக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் கலவையாக இருந்தாலும், வசூலில் நல்ல வருவாய்தான் என்கிறார்கள். மேலும் இந்த படத்தின் துவக்கத்தில் நெல்சன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டாக்டர் எனும் 100 கோடி ரூபாய் வசூல் படத்தை எடுத்துக் கொடுத்திருந்தார் நெல்சன். இதனால் மிகப் பெரிய எதிர்பார்ப்போடு தளபதி விஜய்யுடன் சேர்ந்தார்.
நெல்சன் திலீப்குமார் - விஜய் படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிக அளவில் ட்ரோலும் செய்யப்பட்டது. ஆனால் நெல்சன் விஜய்யை மிகவும் அழகாக காட்டியிருந்தார். பெரிய அளவில் பேச விடாமல், தன்னடக்கத்துடன் நடக்கும் கதாபாத்திரமாக இருந்தது பீஸ்ட் விஜய் கதாபாத்திரம். இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் நெல்சன் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது.
ஏற்கனவே அண்ணாத்த படத்தின் எதிர்மறை டிரோல்களுக்கு பிறகு நல்ல இயக்குநரை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் ரஜினி இருக்க, சன்பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமாரை அழைத்தது. ஆனால் இந்த படம் துவங்கிய ஆரம்ப காலத்தில் நெல்சனை நீக்கிவிட்டார்கள், அவர் ரஜினியை வைத்து படம் எடுக்க வில்லை. சன்பிக்சர்ஸின் கோபத்துக்கு ஆளான நெல்சன் என்றெல்லாம் கதை கட்டி விட்டார்கள். ஆனால் ரஜினி அவரை நேரில் அழைத்து படம் உங்களோடது நீங்க பண்ணுங்க என ஊக்கமளித்திருக்கிறார்.
ஜெயிலர் படமும் துவங்கியது. ரஜினியை வேறு லெவலுக்கு காட்டியிருந்தார் நெல்சன். அவரின் ஒரிஜினல் வயசுக்கு ஏற்ப கதாபாத்திரமாக அமையும் என தெரிகிறது. படத்தில் அரிவாளும் இருக்கிறது. ஆனால் நெல்சனைப் பற்றி தெரியும் அவர் படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
ரஜினிகாந்த் இத்தனை வயதிலும் அவுட் டோர் ஷூட்டிங், உடற்பயிற்சி, தியானம் என தவறாமல் கடைபிடிக்கிறார். ஷூட்டிங்கில் இருந்தாலும் தன்னுடைய சக கலைஞன் மறைவுக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார். இத்தனை வயதிலும் பம்பரமாய் இயங்குகிறார் என வியப்பவர்களும் இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu