ஜெயிலர் திரைப்படம் எப்போது ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெயிலர் திரைப்படம் எப்போது ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

பைல் படம்.

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருத் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை ஆத்மிகா, தமன்னா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை, மங்களூரு என்று 100 நாட்களை கடந்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக படக்குழு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக காரில் இருந்து இறங்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!