ஜெயிலர் படம் எந்த நிலைமையில இருக்கு தெரியுமா?

ஜெயிலர் படம் எந்த நிலைமையில இருக்கு தெரியுமா?
X
ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை டப்பிங் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தற்போது சென்னையில் இல்லை எனவும் அவர் சென்னை திரும்பியதும் டப்பிங் பணிகள் துவங்கும் என்றும் கூறுகிறார்கள்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் துவங்கவில்லையாம். வரும் ஜூன் 1ம் தேதிக்கு பிறகுதான் டப்பிங் துவங்கும் என்றும் சென்னையில் பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் டப்பிங் முடித்துவிட்டு செல்வார்கள் எனவும் தேவைப்பட்டால் மும்பையிலும் டப்பிங் செய்ய போவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தானே எகிறியுள்ளது.

ஜெயிலர் படத்தில் தமன்னாவும் நடித்திருப்பதால் படத்தில் அவர்தான் ரஜினிக்கு ஜோடி என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதை யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அநேகமாக ஜெயிலர் ரஜினி வயதான கெட்டப்பிலேயே படம் முழுக்க வருவார்.

ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக மும்பையில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் சென்னை திரும்பியதும் டப்பிங் பணிகள் துவங்கும் என்று கூறுகிறார்கள்.

ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business