Jailer Latest Update என்ன நடந்தா எங்களுக்கு என்ன? ரஜினி அப்செட்!

Jailer Latest Update என்ன நடந்தா எங்களுக்கு என்ன? ரஜினி அப்செட்!
X
அப்செட்டில் ரஜினிகாந்த்.. ஜெயிலரால் வந்த வருத்தம் இசை வெளியீட்டில் நிவர்த்தியாகுமா?

ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் Jailer Latest Update Tamil நாளுக்கு நாள் புதுசு புதுசாக வந்துகொண்டிருந்தாலும் தீவிர ரசிகர்கள் தவிர பொதுமக்கள் யாரும் ஜெயிலர் படம் குறித்து பேசவே இல்லையே என படக்குழு அப்செட் ஆகியுள்ளது.

ஜெயிலர் படத்தினை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடவேண்டும் என சன் நெட்வொர்க் சேனல்கள், பத்திரிகைகள், வானொலி, இணையதள சேவை என அனைத்திலும் பத்து நிமிடங்களுக்கு ஒரு விளம்பரத்தை ஓட்டி வருகிறது படக்குழு. படத்தின் பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் செலவில் இந்த விளம்பரங்களை செய்கிறார்களோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.

சிவாஜி படம் வரை ரஜினிக்கு இருந்த கிரேஸ், மாஸ் அதன்பிறகு எந்திரன் படத்தில் காலியானது. அந்த படத்தில் சிட்டிக்கு இருந்த வரவேற்பு அறிவியலாளராக நடித்த ரஜினிக்கு கிடைக்கவில்லை. பழைய நடிகர்கள் எல்லாரும் தனக்குரிய ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்கும் வகையில் இருப்பார்கள் என்று முத்திரை குத்தும் அளவுக்கு தர்பார், அண்ணாத்த என ரஜினியும், படங்களே கமிட் ஆகாமல் கமல்ஹாசனும் இருந்ததை தமிழ் சினிமா எதிர்பார்க்கவில்லை.

ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2, விக்ரம் என சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார். ரஜினிகாந்த் ஓடுற குதிரையில் சவாரி செய்யணும்னு ஆசைப்பட்டு நல்ல இயக்குநர்களை மார்க்கெட் இழக்க செய்துகொண்டிருந்தார். ஏ ஆர் முருகதாஸ் தொடங்கி சிறுத்தை சிவா வரை இயக்குநர்களின் மோசமான படங்கள் ரஜினிக்குதான்.

வளர்ந்த இயக்குநர்கள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் தேசிங்கு பெரியசாமி, டான் சிபி சக்ரவர்த்தி, லவ்டுடே பிரதீப் ரங்கநாதன் என இவர்களையும் காக்க வைத்து கடைசியில் வேண்டாம் என நிராகரித்துவிட்டார் ரஜினிகாந்த். இதனால் அவர் மீது இளம் இயக்குநர்கள் பலரும் அப்செட்டாக இருக்கின்றனர்.

ஜெயிலர் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி | Jailer Latest Update

ஏற்கனவே படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருக்கின்ற நிலையில் பான் இந்தியா படமாக விளம்பரம் செய்ய நினைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மேலும் ஒரு அடியாக, தெலுங்கு ஜெயிலர் விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயிலர் படத்திலேயே ஹிட்டான ஒன்று இருக்கிறதென்றால் அது காவாலா பாட்டுதான். அதில் தமன்னா வேற லெவலில் ஆடி இம்ப்ரஸ் செய்திருப்பார். ரஜினிகாந்த் கடைசியில் வந்து ஸ்டைலாக அசத்தியிருப்பார். ஆனால் அதன் பிறகு வந்த ஹுக்கும் பாடல் சரியான வரவேற்பை பெறவில்லை. படத்தில் இந்த பாடலுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கையில் அடிமேல் அடியாக விழா ரத்து செய்யப்பட்டிருப்பதால் ரஜினி அப்செட்டாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா | Jailer Audio Launch

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெரோப், தெலுங்கில் சுனில் என மாநிலத்துக்கு ஒருவர் இந்த படத்தில் இருக்கிறார். இவர்களுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். இதனால் படத்தை இந்திய அளவில் புரமோட் செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

வரும் ஜூலை 28ம் தேதி நடைபெறவுள்ள ஜெயிலர் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களையும் பங்கேற்க கேட்டிருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம். இதன்மூலம் இந்திய அளவில் விளம்பரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறது.

ஜெயிலர் ரிலீஸ் தேதி | Jailer Release Date

ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை வரவேற்க ரஜினி ரசிகர்களும் தடபுடலாக தயாராகி வருகின்றனர். படத்துக்கு சர்வதேச அளவில் விளம்பரம் பெற அடுத்த படத்தில் அமிதாப் பச்சன் இருக்கிறார் என புரளி கிளப்பிவிட்டு பார்த்த நிலையில், இப்போது இந்த இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனும் Jailer Latest Update Tamil பங்கேற்பார் என தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!