மைசூருவில் ஜெயிலர் படத்தின் அதிரடி.. ரஜினிக்கு ஒருவாரம் ‘ரிகர்சல்’

மைசூருவில் ஜெயிலர் படத்தின் அதிரடி.. ரஜினிக்கு ஒருவாரம் ‘ரிகர்சல்’
X
jailer mass update today - ஜெயிலர் படத்தின் அதிரடி ஆக்‌ஷன் சண்டை காட்சிக்கு ரஜினிக்கு ஒருவாரம் ரிகர்சல் நடைபெற்றுள்ளது.

jailer mass update today - ஜெயிலர் படத்தின் அதிரடி ஆக்‌ஷன் சண்டை காட்சிக்கு ரஜினிக்கு ஒருவாரம் ரிகர்சல் நடைபெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த காலமாக பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் ஆக்ஷன் சீக்வென்சை படக்குழுவினர் அதிரடியாக படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து, தற்போது ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.


jailer movie update

இயக்குனர் திலீப்குமாரின் பீஸ்ட் படம் பல்வேறு விமர்சனங்களை கொடுத்த நிலையில், தற்போது இயக்கி வரும் ஜெயிலர் படத்தை அவர் மிகவும் கவனமாக உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது. சரியான திட்டமிடலுடன் சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்களான ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படப்பிடிப்பில் சிவராஜ்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து தற்போது மைசூருவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


rajinikanth jailer movie latest movie

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருவதாகவும், இந்தக் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகளுக்காக அதிகமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக சுமார் ஒரு வாரமாக ரிகர்சலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தை இயக்கும் நெல்சன் திலீப் குமார், இதற்கு முன் டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் மழையை பொழிந்தது என்றே கூறலாம்.


இதன் வெற்றிக்காக நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களுடன் இணைந்து விஜய் சக்சஸ் பார்ட்டி கொண்டாடினார். நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்ஸ்? இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நெல்சனின் முந்தைய படங்களின் கேரக்டர்களான, டாக்டர் வருண் மற்றும் வீரராகவனின் பங்களிப்பு இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில் நெல்சன் சைலண்டாக, தன்னுடைய நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்சை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!