ரஜினிக்கு மகனாக நடிக்க வேண்டியது இவரா? போச்சு பெரிய மிஸ்ஸு

ரஜினிக்கு மகனாக நடிக்க வேண்டியது இவரா? போச்சு பெரிய மிஸ்ஸு
X
ரஜினிக்கு மகனாக முதலில் நடிக்க வேண்டியது வசந்த் ரவி இல்லையாம்!

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மகனாக நடிக்க இருந்தது வேற ஒரு நடிகராம்.. கடைசில கால்ஷீட் இல்லாததால வசந்த ரவி உள்ள வந்திருக்கார். இதனால் அந்த நடிகருக்கு பெரிய மிஸ் என பலரும் பேசி வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்து வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ரஜினிகாந்த் மகனாக நடித்த வசந்த் ரவி கேரக்டர். அவர்தான் பெரிய டிவிஸ்ட்டாக வந்து நிற்பார். அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டிய இருந்தது இன்னொரு நடிகராம். அவர் இந்த பாத்திரத்தில் நடித்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருப்பார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி சுதந்திர தினம் வரைக்கும் பெரிய அளவில் வசூல் கலெக்ட் பண்ணிக் கொண்டு இருக்கிறது. வேலை நாட்களான நேற்றும் இன்றும் கொஞ்சம் வசூல் மந்தமாக இருந்தாலும் இந்த வார இறுதி வரைக்குமே நல்ல புக்கிங் இருக்கிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரொம்ப வருசத்துக்கு அப்றம் ஒரு சூப்பர் ஹிட் படம் வந்திருக்கிறது. அதில் நடித்தவர்கள் எல்லாருக்குமே நல்ல ஸ்கோப் இருந்துது. முக்கியமாக அவருக்கு மகனாக நடித்த வசந்த் ரவி. அவர் கிளைமேக்ஸில் கொடுக்குற டிவிஸ்ட் படத்துல ஈஸியா கணிக்கிறமாதிரிதான் இருந்தது. ஆனாலும் அவரோட நடிப்பு பாராட்டப்பட்டது.

ஆனால் வசந்த் ரவி நடித்த இந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியதா இருந்தது நடிகர் ஜெய்தானாம். அவர்தான் முதலில் இந்த கேரக்டர் பண்ண வேண்டியதா இருந்துதாம் ஆனா அவரு ஒத்துக்கலயாம். காரணம் இந்த படத்துல வில்லனா நடிச்சா அடுத்தடுத்து வில்லனா கூப்பிடுவாங்க அது நமக்கு செட் ஆகாது என்று கூறி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுக்கும் முன்னதாக நெல்சன் கதை எழுதி முடிச்சிருந்தப்ப இந்த படத்துல ரஜினிக்கு மகனா சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாமான்னு யோசிச்சிருக்காரு.

சிவகார்த்திகேயன் வில்லன் ரோல்னாலும் தலைவருக்காக நடிக்கலாம்னுதான் சொல்லியிருக்காரு ஆனா சிவகார்த்திகேயன் நல்லா போயிட்ருக்குறப்ப வில்லனா நடிச்சா அவரோட கெரியர் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்குன்னு ரஜினி வேண்டாம்னு சொல்லிட்டதா சொல்றாங்க. ஆனா இதுல பெரிய மிஸ் ஜெய்க்குதான்.அவரு இந்த படத்துல நடிச்சிருந்தா அவரோட கெரியர் கொஞ்சம் நல்ல பாதைல போயிருக்க வாய்ப்பிருந்துருக்கு.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டாரு ஜெய்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!