அது மறக்க முடியாத நாள்.. சித்தி இத்னானி பெருமிதம்
Siddhi Idnani - திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளரால் எடுக்கப்பட்டதும், பிரபல நடிகரைக் கொண்ட ஒரு திரைப்படத்திலும், அகாடமி விருது பெற்ற ஒருவரின் இசையிலும், தமிழில் தனது முதல் அறிமுகத்தை கொடுத்துள்ளவர் நடிகை சித்தி இத்னானி. திரைப்படத்தில் முதலில் அறிமுகமாவது எப்போதும் சிறப்பு தான். அந்த வகையில், தற்போது கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சித்தி இத்தானி நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆராவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கூறுகையில், "இந்த படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு செப்டம்பரில் பார்த்தேன். அப்போது படத்திற்கு கமிட் ஆகவில்லை. இந்தப் படத்தில் நடிக்கும் எந்தப் பெண்ணும் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது," என்றார் அவர்.
venthu thaninthathu kaadu heroine name
மேலும் "நூறு கொடி வானவில் படத்தில் என்னை இயக்கும் சசி சார், இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா ஆகியோர் ஜிவிஎம் சாரிடம் என்னைப் பற்றி நல்ல விதமாக சொன்னார்கள். நான் ஆடிஷனுக்கு வந்தேன், நீல நிற புடவை அணியச் சொன்னார்கள். லுக் டெஸ்ட்டுக்காகத்தான் நினைச்சேன், சிம்பு சாருடன் ஒரு சீன் பண்ணச் சொன்னார்கள். ஜி.வி.எம் சாரிடம் என்னை தேர்வு செய்தீர்களா என்று கேட்டேன், படத்திற்கு தகுதி பெற சிம்புவுடன் ஒரு காட்சி செய்தாலே போதும் என்றார். அது ஒரு மறக்கமுடியாத நாள்! " இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Siddhi Idnani
கௌதம் மேனன் பெண்களுக்கான வலுவான பாத்திரங்களை எழுதுவதில் நன்கு அறியப்பட்டவர்; அதனால்தான் "ஜிவிஎம் ஹீரோயின்கள்" பட்டியலில் இடம்பிடித்ததில் சித்தி பெருமைப்படுகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu