அசீமுக்கும் பிக்பாஸ் போட்டியாளருக்கும் லவ்வா? யாருப்பா அது?
Bigg Boss 6 Azeem -விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி ஹிட்டாக ஓடுகிறதோ இல்லையோ ஆனால் பிக்பாஸ் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி இப்போது 18 போட்டியாளர்களுடன் நடந்து கொண்டிருக்கிறது.
நடிகர் அசீம் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடரில் நடித்து வந்தார், இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்த செய்தி வெளியாக உடனே மக்கள் அவர் ஷிவானியை காதலிப்பதால் தான் விவாகரத்து பெற்றார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் அசீம் மெகா தொடர்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் அசீமை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த சீரியலுக்கு பிறகு முன்னணி சின்னத்திரை நாயகனாக அசீம் வலம் வர ஆரம்பித்தார். அதிலும் பகல் நிலவு சீரியலில் அவருடன் ஜோடியாக நடித்த ஷிவானியுடன் அசீமுக்கு கெமிஸ்ட்ரி மிகவும் வொர்க் அவுட் ஆனது. இந்த ஜோடிக்காகவே பகல் நிலவு சீரியலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதிலும் சீரியலில் இவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தன.
தொடர்ந்து சீரியல்களில் நெருக்கமாக நடித்துக் கொண்டிருந்த அசீம், ஷிவானி ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமானார்கள். இருவரும் மிக மிக நெருக்கமாக இருந்த டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் பற்றி எரிந்தன. சீரியல் கணவன்,மனைவியாக நடித்தவர்கள் சீரியசாகவே கணவன் மனைவியாக வாழ்வதாக பேச்சு எழுந்தது. தனக்கு மனைவி, மகன் இருப்பதையே மறந்த ஷிவானியுடன் அசீம் செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் அசீமின் மனைவி ஜோயாஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சாமியாடியுள்ளார் . அத்தோடு கணவன் என்றும் பாராமல் அசீமை நையப்புடைத்துவிட்டு திரும்பியதாகவும் அப்போது பேச்சுகள் எழுந்தன.
இதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் குறைய ஆரம்பித்த நிலையில் தான் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அசீமும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக தயாரானார். ஆனால் இதனை அவரது மனைவி ஜோயா விரும்பவில்லை. ஷிவானி இருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் நடப்பதே வேறு என்று ஜோயா அசீமை மிரட்டியதாக சொல்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல மனைவி ஜோயா முட்டுக்கட்டை போட்டதால் அப்போதே விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இனியும் அசீமுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவுக்கு வந்த ஜோயாவும் விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டு தற்போது விவகாரத்து பெற்றுள்ளார்.
ஆனால் அசீம் இந்த கிசுகிசு வந்தபோதே நானும் என் மனைவியும் வேறு சில காரணங்களால் விவாகரத்து பெற்றோம், மற்றபடி யாரும் காரணம் இல்லை என கூறி முடித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu