வசூல் மழையில் பார்த்திபன் - மனத்தைக் குளிர்விக்கும் 'இரவின் நிழல்'..!

வசூல் மழையில் பார்த்திபன் - மனத்தைக் குளிர்விக்கும் இரவின் நிழல்..!
X
இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' வசூலில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக வெளியாகியுள்ள 'இரவின் நிழல்' படம் வசூலிலும் வரவேற்பிலும் நல்ல தகவல்களை நல்கி வருகிறது. தமிழ்த் திரைப்பட உலகில், பல புதுமையான முயற்சிகளை தனது படங்களில் புகுத்திவரும் புதுமைப்பித்தன்தான் இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

அவரது மற்றுமோர் புதுமைப்படம்தான் அண்மையில் திரையில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் 'இரவின் நிழல்'. ஏற்கெனவே, 'இரவின் நிழல்' படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் அரிதான இந்த மிகப்பெரும் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்கிறார்கள். இதுவரை படம், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளிதாகியுள்ளது. இந்த இனிய தகவல் மேலும் கூடுதலாகும் என்கிற தகவல் 'இரவின் நிழலி'ன் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனின் மனத்தை குளிர்வித்து வருவதாக கோடம்பாக்கக் கருத்துப் பட்சிகள் உரத்துச் சொல்கின்றன.

Tags

Next Story
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவா்கள் 15 போ் தோ்ச்சி