இன்னிய பர்த் டே ஹீரோ சூர்யா பற்றி அவரது தந்தை சொன்ன சுவாரஸ்யமான தகவல்கள்
இன்னிய பர்த் டே ஹீரோ சூர்யா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது நடந்த இண்டரஸ்டிங்கான ஒரு விஷயத்தை அவர் அப்பா சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.
"லயோலா கல்லூரியில் சூர்யா படித்து கொண்டிருந்தபோது ஒரு ஜோதிடர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஜோசியம் என்பதே ஒரு கணக்குதான். அதை தேவையில்லாமல் எல்லோரும் கற்பனை செய்து கொள்ள தேவையில்லை. ஏனென்றால், எனது தந்தையும் ஜோதிடத்தில் இருந்தவர்தான். அவர் நான் பிறந்தபோதே என்னுடையதை கணக்கிட்டு பார்த்து 'இந்த பையனுக்கு ஒரு வருஷம் ஆகும்போது தந்தை இருக்க மாட்டார்' என சொன்னார். அதேபோல, எனது பத்தாவது மாதத்தில் அவர் இறந்துவிட்டார்.
அதனால், கணக்கீட்டின் அடிப்படையில் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் ஜாதகத்தை பார்த்துவிட்டு, 'இந்த பையன் கலைத்துறையில் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவான்' என்றார். அதை கேட்டுவிட்டு நான் சிரித்தேன். 'நல்லா பார்த்து சொல்லு, சின்னவனா, பெரியவனா' என கேட்டேன். 'பெரிய பையன்தான். உங்களை விட பெரிய ஆளாக, அதிகம் சம்பாதிக்க கூடிய ஒருவனாக, நிறைய விருதுகளை வாங்குவார்' என ஜோதிடர் சொன்னார்" என்றவர் இது கேட்டு சிரித்ததற்கான காரணத்தையும் பகிர்ந்தார்.
"அதிகம் பேசாத ஒரு நபர்தான் சூர்யா. அப்படி இருக்கும் போது அவர் எப்படி நடிகராவார் என்பதுதான் ஜோதிடரிடம் எனக்கு இருந்த கேள்வி. அதற்கு அவர், மகாகவி காளிதாஸ் ஊமையாக இருந்து காளியின் அருள் பெற்று ஞானம் வந்த கதையை சொன்னார். அதையெல்லாம் அப்போது நான் நம்பவில்லை. ஆனால், 1991-ல் அவர் சொன்னது போலவே, 1997-ல் சூர்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யா இந்த அளவிற்கு வருவார் என சத்தியமாக நானும் என் துணைவியாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu