TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!

TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!
X
TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது? எந்த தொடரை பலரும் விரும்பி பார்க்கிறார்கள் என்கிற ரேட்டிங்கை டிஆர்பி முறையில் வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இனியா சீரியல் சன்டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வந்துள்ளது.

சன்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் டிஆர்பியின் மேலே வந்திருக்கிறது. ஆல்யா மானசா நடிக்கும் இந்த சீரியல் தற்போது வரை 150 எபிசோட்களைக் கடந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது தமிழக தாய்மார்களிடையே நல்ல பிரபலமான நடிகை ஆல்யா மானசா. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியிலிருந்து சன்டிவிக்கு வந்தார். அவரின் கணவரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

மற்ற தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது இனியா தொடர். இவரின் கணவர் சஞ்சீவ் நடிக்கும் கயல் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் இவரது சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

10.24 புள்ளிகள் பெற்று கயல் தொடர் முதலிடத்தில் இருக்கிறது.

இரண்டாம் இடத்திலுள்ள இனியா தொடர் 9.16 புள்ளிகள் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தை வானத்தைப் போல, மிஸ்டர் மனைவி இணைந்துள்ள மகாசங்கமம் தொடருக்கு கிடைத்திருக்கிறது. இது 9.01 டிஆர்பி பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் 8.86 டிஆர்பியும், சுந்தரி சீரியல் 8.41 டிஆர்பியும், ஆனந்த ராகம் 6.28 டிஆர்பி, அன்பே வா 4.67, நேத்ரா 1.76 என டிஆர்பி ரேட்டிங் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai marketing future