ரோபோ சங்கர் மகளுக்குத் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

ரோபோ சங்கர் மகளுக்குத் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
X

ரோபோ சங்கர் தனது மகள் மற்றும் திருமணமாகவுள்ள மணமகனுடன்.

Indraja Robo Shankar-அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் இவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் எனவும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டு வருகின்றனர்.

Indraja Robo Shankar-அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் இவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் எனவும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டு வருகின்றனர்.

பிகில் படத்தில் வரும் ஒரு வசனத்தில் விஜய் ஒரு பெண்ணை அவரது உடல் எடையை வைத்து கேலி செய்து உசுப்பேத்துவார். இதனால் அவர் கோபத்தில் நன்றாக விளையாடுவார். அப்படி படத்திலும் உருவகேலி காரணமாக நிஜத்திலும் நன்கு அறிமுகமானவர் இந்திரஜா. இவர் தீவிர கமல்ஹாசன் ரசிகரும், நடிகருமான ரோபோ சங்கரின் மகள்.


இந்திரஜா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். கார்த்திக் என்பவருடன் அடிக்கடி ரீல்ஸ், புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் இவர் யார் என பலரும் கேட்டுக்கொண்டு வந்தனர். ரீல்ஸ் பதிவிடும்போது மாமா என கேப்சன் போட்டு போட்டதால் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்து வந்தனர். இந்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உண்மையை வெளியிட்டுள்ளார் இந்திரஜா.

தொடர்வோம் என்கிற தன்னார்வ அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறாராம் கார்த்திக். அவர் மதுரையைச் சேர்ந்தவர். ரோபோ சங்கரின் நெருங்கிய உறவினர் என்பதால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.

இந்திரஜா தற்போது படத்தில் நடித்துக் கொண்டே படித்தும் வருகிறார். படிப்பு முடிந்ததும் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தேதி முடிவு செய்யவில்லை விரைவில் என்று தெரிவித்துள்ளார் கார்த்திக்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திரஜாவும் தேதி இதுவரை முடிவு செய்யவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!