இந்தியன் 2 படத்தோட கதை இப்படி இருந்தா நல்லா இருக்கும்ல?

இந்தியன் 2 படத்தோட கதை இப்படி இருந்தா நல்லா இருக்கும்ல?
இந்தியன் 2 படத்தின் கதையை சரியில்லை என ரசிகர்கள் பலர் கருத்து கூறியுள்ள நிலையில் அதை கொஞ்சம் மாத்தி யோசிச்சா எப்படி இருக்கும் என்பதே இந்த பதிவு.

மாற்றி யோசிப்போம் : இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படம் பலருக்கு பிடிக்கவில்லை என இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஷங்கர் இந்த கதையைக் கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால், படம் அவர்களுக்கு பிடித்திருக்குமோ? சரி வாருங்கள். கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

சென்னையில் யூடியூப் மூலம் பல்வேறு வீடியோக்களை எடுத்து பதிவேற்றும் குழுவாக இருக்கிறது பார்க்கிங் டாக்ஸ். இதில் சித்தார், பிரியா பவானி ஷங்கர், ஜெகன் மற்றும் இன்னொரு நண்பர். இவர்கள் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை உள்வாங்கி அதனை கிரியேட்டிவ் வீடியோவாக எடுத்து அதில் வரும் வருமானத்தை வைத்து மேலும் பல நல்ல செயல்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.


அந்த நேரத்தில் கும்பகோணத்தில் கல்விக் கடன் வாங்கி கட்டமுடியாத நிலையில், அவமானப்படுத்தப்பட்டு ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. இதனைப் பற்றிய செய்தியை பார்க்கிங் டாக்ஸ் குழு ஒளிபரப்புகிறது. அவர்களுக்கு இதன்மூலம் மிகப்பெரிய பிரபலம் கிடைக்கிறது. இளைஞர்கள் பலர் இவர்கள் பின்னால் வந்து சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் மக்களுக்காக அடுத்தடுத்து பல புகார்களும் இவர்களின் பார்வைக்கு வர, இவர்கள் தங்கள் பொறுப்பாளர்களாக உணர்ந்து இதற்கு தீர்வு தேட நினைக்கிறார்கள்.

இந்நிலையில் திடீரென ஒருநாள் இந்த குழுவைச் சேர்ந்த சித்தார்த் வீட்டுக்கு போலீஸ் வந்து அவரை கைது செய்துவிட்டு செல்கிறார்கள். இதேபோல மற்ற மூவரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்நிலையில் இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சில கொலைகள் நிகழ அதற்கு இவர்கள்தான் காரணம் என உள்ளூர் காவல்துறை இவர்களை சிறையில் தள்ளுகிறது.

கொலை செய்யப்பட்டவர்கள் முக்கியமான புள்ளிகள் என்பதாலும், பல நாட்களாகியும் இந்த வழக்குகளில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதாலும், இவர்கள்தான் குற்றவாளிகளா என்பதில் சந்தேகம் இருப்பதாலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

சிபிஐ தீவிரமாக விசாரணையில் ஈடுபடுகிறது. இதில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் அரசு மீது கடுமையான நெருக்கடிகளைக் கொடுப்பதால், தமிழக முதல்வர் புகழேந்தியே நேரடியாக சிபிஐ அதிகாரி பிரமோத்தை அழைத்து இதுகுறித்து விரைவில் கண்டுபிடிக்க கோரிக்கை வைக்கிறார்.


சிபிஐ அதிகாரி பிரமோத்தின் சக அதிகாரியாக விவேக் தன்னுடைய ஆரம்பகாலத்தில் ஒரு வழக்கை விசாரித்ததிலிருந்து, அம்பி எனும் தன்னுடைய நண்பனைப் பற்றி சொல்ல, அவர் அந்நியனாக மாறுவது குறித்தும் அவர் செய்யும் கொலைகள் குறித்தும் தெரிந்துகொள்கிறார்கள். அம்பி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதையும் உறுதிப்படுத்திக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.

விவேக் தனது அனுபவத்தில் இது செய்யும் தவறுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பதை கண்டறிகிறார். அந்த வகையில், தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்கிறார் சிபிஐ அதிகாரி பிரமோத். அவரின் தந்தை கிருஷ்ணசாமியும் தனது கடந்த கால அனுபவங்களின்படி, இது வர்மக்கலை எனவும், அதுகுறித்த புத்தகத்தை தான் படித்திருப்பதையும் கூறுகிறார்.

இப்படி 3,4 கொலைகளை எந்தெந்த காரணங்களுக்காக எந்தெந்த வர்மக்கலைகளை பயன்படுத்தி கொன்றிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துவிடுகிறார்கள். அப்போது இந்த வர்மக்கலைகளை அறிந்தது இந்தியன் தான். அவர் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லையே என விவாதிக்கும்போது, இந்தியன் தாத்தா லைவ் வருகிறார்.

தான் இந்த காரணங்களுக்காக திரும்ப வருவதாகவும், தான் யார் யாரையெல்லாம் கொல்ல இருப்பதையும் சொல்கிறார். அதன்படி, அனைத்து அதிகாரிகளுடன் அரசியல்வாதிகளும் கொதித்தெழுகிறார்கள். சாதி வெறியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த ஒருவரை கண்டுபிடிக்க அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். அந்த கூட்டத்தை கூண்டோடு கடத்தி லைவில் கொலை செய்கிறார் இந்தியன் தாத்தா. சாதி தான் இங்கே பெரிய பிரச்னைகளுக்கு காரணம். அதை வைத்து இங்கு அரசியல் செய்யப்படுகிறது. குற்றம் நடந்தால் கண்டிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இதற்கு உடந்தையாகிறார்கள் என போலீஸ், நிர்வாக அதிகாரி, உள்ளூர் அரசியல்வாதி, மலம் கலந்த நபர் என குத்தி கொலை செய்கிறார்.


அவரைப் பிடிக்க சிபிஐ அந்த இடத்துக்கு செல்வதற்கு முன்னதாக தப்பிச் செல்கிறார் இந்தியன் தாத்தா. அடுத்து இன்னொரு கெட்டப்பில், பிரபல வங்கி அதிகாரியைக் கொல்ல செல்கிறார். இப்படியே படிப்படியாக கிராணைட் ஊழல், மக்கள் நல பணியாளர் தேர்வு ஆணைய அதிகாரி என அடுத்தடுத்து பல கொலைகள் நடக்க சிபிஐ டென்சன் ஆகி, இந்தியன் தாத்தாவை பிடிக்க காலக்கெடுவை நிர்ணயிக்கிறது.

அதற்குள் சித்தார்த் மற்றும் நண்பர்கள் வீட்டில் நடந்த ரெய்டுகள் அதில் மாட்டி ஏற்படும் சிக்கல்கள் என அவர்களின் வாழ்க்கையே நிலைகுலைந்து இருக்கிறது. இந்த அளவுக்கு மக்கள் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் மலிந்துபோயிவிட்டார்கள். இப்படி நான் கொலை செய்வதென்றால் உங்கள் அனைவரையுமே கொல்ல வேண்டுமே. எப்போது திருந்த போகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் சிபிஐ அதிகாரிகள் இந்தியன் தாத்தாவை சுட்டுப்பிடிக்க திட்டமிடுகிறார்கள். முதுகில் குண்டடிப்பட்டு தப்பிக்கிறார் இந்தியன் தாத்தா. இதைத்தொடர்ந்து இந்தியன் 3 படம் வருகிறது.

இந்தியன் 2 விமர்சனம்

இரண்டு தலைமுறைகளின் ஏக்கம், எண்ணற்ற தடைகளைத் தாண்டி, இந்தியன் தாத்தா மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார்! 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட திரைக்காவியம் "இந்தியன் 2" திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? செனாபதியின் ஆக்ரோஷம் இன்னும் அனல் தெறிக்கிறதா? இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

1. கதைக்களம்:

முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா தனது மகனையே கொன்று ஊழலை ஒழிக்கப் போராடினார். இந்த இரண்டாம் பாகத்தில், அவரது போராட்டம் தொடர்கிறது. இம்முறை அவரது இலக்கு, அரசல் புரசலாக வேரூன்றியிருக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள். இந்தியன் தாத்தாவின் ஆக்ரோஷப் பழிவாங்கல் படத்தின் மையக்கரு.

2. நடிப்பு:

கமல்ஹாசன்: செனாபதியாக மீண்டும் கர்ஜிக்கும் கமல், தனது வயதை மறந்து அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது.

சித்தார்த்: இளம் மற்றும் துடிப்பான கதாபாத்திரத்தில் சித்தார்த் பொருத்தமாக அமைந்துள்ளார். இந்தியன் தாத்தாவின் வழிகாட்டலில் அவரது வளர்ச்சியை நம்பும்படியாகச் சித்தரித்திருக்கிறார்.

பிற நடிகர்கள்: காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் தங்களது பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

3. ஆக்‌ஷன் காட்சிகள்:

இந்தியன் 2 படத்தின் உயிர்நாடி அதன் அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் தான். ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டமாகவும், நம்பகத்தன்மையுடனும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

4. தொழில்நுட்ப அம்சங்கள்:

ஒளிப்பதிவு: ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த தோற்றத்தை கொடுத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளன.

இசை: அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.

5. படத்தின் சில குறைகள்:

கதை: கதையில் பெரிய திருப்பங்கள் இல்லை. முதல் பாகத்தின் பாணியை ஒட்டியே கதை நகர்கிறது.

நீளம்: படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதால் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது.

6. இந்தியன் 2 யாருக்கு?

ஆக்‌ஷன் ரசிகர்கள், கமல் ரசிகர்கள், பிரம்மாண்டமான காட்சிகளை விரும்புபவர்கள் என அனைவருக்கும் இந்த படம் விருந்தாக அமையும்.

7. தீர்ப்பு:

ஒரு சில குறைகளைத் தாண்டி, இந்தியன் 2 ஒரு முழுமையான ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படம். படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டியவை.

Tags

Next Story