இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் அறிமுக காட்சி..! கொல மாஸ் சாரே!

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் அறிமுக காட்சி..! கொல மாஸ் சாரே!
X
இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனின் அறிமுக காட்சி இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனின் அறிமுக காட்சி இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எடுக்க குறைந்தது 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் சாதாரணமாக ஆகலாம். பெரிய படங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும். சில சிறிய படங்கள் 3 மாதங்களிலேயே முடிந்துவிடும் என நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பிக்பாஸ் முதல் சீசனில் அறிவிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 6 சீசன்களுக்கு பிறகுதான் ரிலீஸ் ஆக இருக்கிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இந்த படம் தயாராகி வருகின்றது. ஆரம்பத்திலிருந்தே படத்துக்கு ஏழரை என்பது போல விரும்பத்தகாத பல விசயங்கள் நடைபெற்று வருகின்றன.

கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படம், உதயநிதி ஸ்டாலின் பார்வையில் பட இப்போது தயாராகி ரிலீஸுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியன் தாத்தாவைக் காண ரசிகர்கள் பலர் காத்துக்கிடக்கின்றனர். படம் வரும் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் தவிர, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர இன்னும் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் படத்தில் இருக்கிறது என்பதால் கமல்ஹாசன் வரும் காட்சிகள் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. படத்திலிருந்து காஜல் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்டு இந்தியன் 3 படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கமல்ஹாசன் வருவதற்கே பாதி படம் முடிந்துவிடுமாம். முதல் பாதியில் கதாநாயகனாக சித்தார்த் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் இருவரும்தான் வருகிறார்களாம். கிட்டத்தட்ட இன்டர்வெல் காட்சியில்தான் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக அறிமுகமாகிறார். தாத்தா வர்றாரு பாடல் அந்த நேரத்தில்தான் வரும் என்றும் நம்பப்படுகிறது.

கம்பேக் இந்தியன் பாடல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் அவதிக்குள்ளாகி நிற்கும்போது இந்தியன் தாத்தாவைக் கூப்பிடுகிறார்கள். ஒரு அழுத்தமான காட்சியில் அவர் அறிமுகமாகும்போது தியேட்டரே எழுந்து ஆரவாரப்படும் என்கிறார்கள். விக்ரம் படத்தில் கர்ணன்தான் விக்ரம் என்று நமக்கு தெரியும்போது ஒரு கூஸ்பம்ஸ் காட்சி வருமே அதுபோல.

மெர்சல் படத்தில் விஜய்க்கு தரப்பட்ட பில்டப் இண்ட்ரோ அழகாக காட்சி படுத்தப்பட்டிருக்கும். அதுபோல ஒரு இண்ட்ரோதான் இந்த படத்தில் இருக்கும் என்கிறார்கள். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னமும் அதிகரித்துள்ளது.

Tags

Next Story
விரதத்துடன் தலைவலியும் வந்தால் என்ன செய்யலாம்? தீர்வுகள் இதோ!