சீக்கிரம் முடியுது இந்தியன் 2 ! ரிலீஸ் சரஸ்வதி பூஜைக்கா ? தீபாவளிக்கா ?

சீக்கிரம் முடியுது இந்தியன் 2 ! ரிலீஸ் சரஸ்வதி பூஜைக்கா ? தீபாவளிக்கா ?
X
காலை 7 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுகிறார்களாம். இரவு 7 மணி வரைக்கும் நீட்டித்து படத்தை எடுக்கிறார்கள் என்றும் அப்படி படப்பிடிப்பு நடத்த முடியாத நேரங்களில் படம் சம்பந்தமான மற்ற வேலைகளில் பிஸியாகவே இருக்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் முடியப் போகிறது. திட்டமிடப்பட்ட நாட்களிலிருந்து 20 முதல் 30 நாட்களுக்கு முன்னமே ஷூட்டிங் முடியப் போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பை விட அதிக வேகத்தில் ஷங்கர் பணிபுரிந்து வருவதால் படத்தை திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே திரைக்கு கொண்டு வந்துவிடலாம் என படக்குழு முடிவுக்கு வந்துள்ளதாம்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட இன்னும் பல நடிகர் பட்டாளே நடித்துள்ள படம் இந்தியன் 2. பல பிரச்னைகளுக்கு இடையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக முடிவடையப் போகுது.

எல்லா புகழும் இயக்குநருக்கே என்று சொல்லும் வகையில், ஷங்கர்தான் இதற்கு முழு முதற் காரணம் என்கிறார்கள். கமல்ஹாசனே ஷங்கரை இரண்டு,மூன்று முறை பாராட்டிவிட்டாராம். நினைத்ததை விட ஸ்பீடா இருக்கீங்க, 30 வருசத்துக்கு முன்னாடி இருந்த அதே வேகம் என கமல்ஹாசனே பாராட்டி பேசியிருப்பதால் ஷங்கர் பயங்கர மகிழ்ச்சியில் இருக்கிறார் என்கிறார்கள்.

காலை 7 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுகிறார்களாம். இரவு 7 மணி வரைக்கும் நீட்டித்து படத்தை எடுக்கிறார்கள் என்றும் அப்படி படப்பிடிப்பு நடத்த முடியாத நேரங்களில் படம் சம்பந்தமான மற்ற வேலைகளில் பிஸியாகவே இருக்கிறார் ஷங்கர்.

இந்தியன் 2, ராம்சரண் படம் இரண்டையும் மாறி மாறி செய்து வந்தவருக்கு இப்போது கொஞ்சம் ரிலீஃப் ஆனது போல கியாரா அத்வானிக்கு திருமணம் நடந்து அவர் விடுமுறையில் இருக்கிறார். ராம் சரணும் ஆர் ஆர் ஆர் படக்குழுவுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இப்படி லட்டு மாதிரி வாய்ப்பை சும்மா விடுவாரா, மொத்த ஷெட்யூலையும் இந்தியன் 2வுக்கு போட்டு சும்மா தீய தீய வேலை பார்க்கிறார்.

கமல்ஹாசன் வரும் நாட்களில் அவரே இறங்கி வந்து எல்லா காட்சிகளையும் எடுக்கிறார் என்கிறார்கள். கமல்ஹாசனுடன் காம்பினேசன் உள்ள நடிகர்களின் கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தி அனைத்து காட்சிகளையும் மார்ச் மாதம் முடிவதற்குள் முடித்துவிட்டால், அவர் தவிர மற்ற காட்சிகளை கடகடவென முடித்துவிட்டு எடிட்டிங் அனுப்பி விடலாம் என முடிவு செய்திருக்கிறாராம்.

ராம்சரணும், கியாரா அத்வானியும் திரும்பி வருவதற்குள் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டால், எடிட்டிங் டேபிளில் ரிலாக்ஷாக உக்கார்ந்து வேலை பார்க்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ராம்சரண் படமும் முக்கியமான காட்சிகள் முடிக்கப்பட்டு மற்ற காட்சிகளுக்காகவே காத்திருக்கிறது. இதனால் இந்தியன் 2 படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஷங்கர். ராம்சரண் படம் அரசியல் கண்டென்ட் என்பதால், 2024ம் ஆண்டு தேர்தல் ஜூரம் வந்த பிறகே ரிலீஸ் செய்கிறார்கள்.

இதனால் 2024 பொங்கல், சங்கராந்தி தினத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்து கல்லா கட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் கூடுதல் அவகாசம் இருக்கிறது. மேலும் இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தாலும் படம் சீக்கிரம் முடிந்தால் முன்னதாகவே வெளியிடும் ஐடியாவும் இருக்கிறதாம். ஒருவேளை சரஸ்வதி பூஜை நாட்களில் வருமோ?

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!