கமல்ஹாசனால் விஜய்க்கு சிக்கல்! புது திட்டம் போடும் லியோ குழு!
லியோ படம் வெளியாகி 3 வார காலம் தாமதமாக வெளியானாலும் இந்தியன் 2 படத்தால் லியோவுக்கு மிகப்பெரிய சிக்கல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் லியோ பட தயாரிப்பு நிறுவனம் அப்செட்டில் இருக்கிறது. மேலும் விளம்பரங்களை மிகப் பெரிய அளவில் வெளியிட்டு படத்தை வெற்றிப் படமாக்க முயற்சி செய்து வருகிறதாம்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த வாரத்துடன் பேக் அப் செய்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. லியோ படத்தில் விஜய் மட்டுமின்றி திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். கொடைக்கானல், சென்னை என சின்ன சின்ன ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு காஷ்மீருக்கு பறந்தது படக்குழு. கிட்டத்தட்ட 3 மாதங்கள் படப்பிடிப்பு அங்கு நடந்தது. இந்நிலையில் இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. விஜய், திரிஷா காட்சிகளோடு படப்பிடிப்பு முடிந்து 23ம் தேதி சென்னை திரும்புகிறது படக்குழு.
மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் விஜய்க்கு இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனியே படம்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சி கடைசியாக படம்பிடிக்கப்பட இருக்கிறதாம். சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.
23 ம் தேதி சென்னை திரும்பும் லியோ படக்குழு அடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்கிறது. காஷ்மீரில் கடும் குளிரில் இருந்தவர்கள் இப்போது சென்னையில் சில தினங்கள் ஓய்வெடுக்க தயாரிப்பு தரப்பே அனுமதி அளித்துள்ளதாம். ஏற்கனவே சொன்னது போல ஹைதராபாத் செட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். 40 நாட்களில் முழு செட்டையும் போட டைம் கேட்டிருக்கிறார்களாம். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கி, ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்ட அடுத்த ஷெட்யூலுக்கு சென்னையில் 1 வாரம் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 வது வாரத்திலேயே இந்தியன் 2 படம் வருவதால் லியோ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை விட அந்த படம் பார்த்தபிறகு மக்கள் பேசிய பேச்சுக்கள்தான் இத்தனை பேரை திரையரங்குக்கு கூட்டி வந்து படத்தை மெஹா ஹிட் ஆக்கியது. அந்த வகையில் பார்த்தால் லியோ படமும் வெளியான பிறகு அதன் கதையைப் பொறுத்தே படம் எப்படி என்பதை தீர்மானிக்கும். ஆனால் இந்தியன் 2 அப்படி அல்ல. அந்த படத்தை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதற்கு தனி ஆடியன்ஸ் கூட்டமே இருக்கிறது.
லியோ படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆனாலும் அந்த வார விடுமுறையில்தான் திரையரங்குகள் நிறையும். அதே நேரம் 3 வாரங்கள் ஓடும் அளவுக்கு நிறைய கண்டென்ட் இருந்தாலும் அடுத்து இந்தியன் 2 படம் வருகிறது அதை திரையரங்கில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து லியோ படத்துக்கு போகவேண்டாம் என பலர் நினைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் லியோ படம் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருக்காது. ஆனால் இந்தியன் 2 படம் நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியடையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu