இந்தியன் 2 வில் தான் முழு கவனமும்! ஷங்கர் வெளியிட்ட அப்டேட்!

இந்தியன் 2 வில் தான் முழு கவனமும்! ஷங்கர் வெளியிட்ட அப்டேட்!
X
Einthusan Tamil Padam 2-உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்களுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? ஆமாம் என்றால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு. முழுக்க முழுக்க இந்தியன் 2 படத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் இந்த பகுதியில் நாம் காணப் போகிறோம்.

Einthusan Tamil Padam 2-ஷங்கர் இயக்கி வந்த கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் ஷங்கர் முழுக்க முழுக்க இந்தியன் 2 படத்தில் தான் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் கணக்கில் இது குறித்து பேசியுள்ளார் ஷங்கர்.


கிளைமேக்ஸ் மட்டும்தான் பாக்கி | Indian 2 Climax Shoot

இந்தியன் 2 படத்தின் தென்னாப்பிரிக்கா ஷூட்டிங் முழுவதும் முடிந்து, தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சி மட்டும்தான் பாக்கி என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட் | Indian 2 latest updates

இந்தியன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தைவான் சென்றிருக்கிறது. அங்கு மொத்தமே 8 நாட்கள் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம். இந்த வாரமே தென்னாப்பிரிக்காவுக்கும் பறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் ஒரு பாடல் காட்சியையும் ஒரு சண்டைக் காட்சியையும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவே கடைசி ஷெட்யூல் என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி | Indian 2 Release date

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் படப்பிடிப்பில் இருந்து வருகிறது. மிகப் பெரிய படம் என்பதால் இது தாமதமாகி வருகிறது. மேலும் சில அசம்பாவிதங்களும் படப்பிடிப்பு சமயத்தில் நடந்துள்ளன. இதனால் படத்தை துரிதமாக முடிக்க படக்குழு முடிவு செய்து இப்போது கிட்டத்தட்ட 80 சதவிகித படத்தை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.


லைகா சுபாஷ்கரன் தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் இருக்கிறது.

ஜெயமோகன், லக்ஷ்மி சரவண குமார், கபிலன் வைரமுத்து ஆகியோர் இந்த படத்தின் எழுத்துப் பணிக்கு உதவியிருக்கின்றனர். ஷங்கர் மட்டுமின்றி அவரின் உதவி இயக்குநர்களான இன்றைய இயக்குநர்களும் படப்பிடிப்புக்கு மிகப் பெரிய உதவி செய்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தை வரும் தீபாவளி 2023க்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் படம் என்பதால் இந்த படத்தை நிச்சயமாக பெரிய அளவில் விளம்பரம் செய்து முடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


இந்தியன் 2 நடிகர்கள் | Indian 2 Starcast

கமல்ஹாசன்


காஜல் அகர்வால்


பிரியா பவானி ஷங்கர்


ரகுல் பிரீத் சிங்


சித்தார்த்


பாபி சிம்ஹா


இவர்களுடன் மேலும்

சமுத்ரகனி

மாரிமுத்து

ஜார்ஜ் மரியான்

வெண்ணிலா கிஷோர்

டெல்லி கணேஷ்

மனோபாலா

குல்சன் குரோவர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்


இந்தியன் 2 கதை | Indian 2 story

சேனாதிபதி தனது சொந்த மகனையே கொன்றுவிட்டு இந்தியாவை விட்டு தப்பித்து போகிறார். இந்தியனுக்கு சாவே இல்லை என்று முடிக்கிறார்கள். 2023 படத்தில் மீண்டும் இந்தியா வருகிறார் சேனாதிபதி. இங்கு நடைபெறும் லஞ்சம் ஊழல்களை செய்பவர்களை துடைத்தெறிகிறார். இந்தியன் படம் முடிந்த இடத்திலிருந்து இந்தியன் 2 படம் ஆரம்பிக்கிறது.


இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி | Indian 2 OTT Release Date

வழக்கமாக திரையரங்கில் படம் வெளியாகி 35 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும். இந்தியன் 2 திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக கூறப்படுவதால் ஓடிடியில் 35 நாட்கள் கழித்து அதாவது டிசம்பர் 15ம் தேதி அளவில் ஓடிடியில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.


இந்தியன் 2 ஓடிடி தளம் | Indian 2 OTT Platform

இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் இவற்றில் ஏதாவது ஒன்றில் படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.


இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட் | Indian 2 Latest Update

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் முடியப் போகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு மே மாத இறுதியிலேயே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடந்து முடிந்த படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட்டும் செய்திருக்கிறார்களாம். பாடல் காட்சிகளும் முடிந்துவிட்டால் அதனையும் எடிட் செய்து முழு படத்தையும் முடித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இனி அடுத்து ஆப்பிரிக்காவுக்கு செல்கிறது படக்குழு. ஷங்கர், கமல்ஹாசன் உட்பட பலரும் இந்த குழுவுடன் ஆப்ரிக்காவுக்கும் பின் தாய்லாந்துக்கும் பறக்கிறார்கள். இடைவிடாது அடுத்தடுத்து ஷூட்டிங் செய்து மே மாத இருதியில் படப்பிடிப்பு முடிந்துவிடக்கூடும் என்கிறார்கள்.

இந்தியன் 2 படத்தில் திட்டமிடப்பட்ட நாட்களிலிருந்து 20 முதல் 30 நாட்களுக்கு முன்னமே ஷூட்டிங் முடியப் போகிறதாம். முன்பை விட அதிக கவனத்தை ஷங்கர் இந்தியன் 2 மீது செலுத்தி வருவதால் படத்தை திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே திரைக்கு கொண்டு வந்துவிட நினைக்கிறார்களாம்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட இன்னும் பல நடிகர் பட்டாளே நடித்துள்ள படம் இந்தியன் 2. பல பிரச்னைகளுக்கு இடையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக முடிவடையப் போகுது. காலை 7 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுகிறார்களாம். இரவு 7 மணி வரைக்கும் நீட்டித்து படத்தை எடுக்கிறார்கள் என்றும் அப்படி படப்பிடிப்பு நடத்த முடியாத நேரங்களில் படம் சம்பந்தமான மற்ற வேலைகளில் பிஸியாகவே இருக்கிறார் ஷங்கர்.

இந்தியன் 2, ராம்சரண் படம் இரண்டையும் மாறி மாறி செய்து வந்தவருக்கு இப்போது கொஞ்சம் ரிலீஃப் ஆனது போல கியாரா அத்வானிக்கு திருமணம் நடந்து அவர் விடுமுறையில் இருக்கிறார். ராம் சரணும் ஆர் ஆர் ஆர் படக்குழுவுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். கமல்ஹாசன் வரும் நாட்களில் அவரே இறங்கி வந்து எல்லா காட்சிகளையும் எடுக்கிறார் என்கிறார்கள். கமல்ஹாசனுடன் காம்பினேசன் உள்ள நடிகர்களின் கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தி அனைத்து காட்சிகளையும் மார்ச் மாதம் முடிவதற்குள் முடித்துவிட்டால், அவர் தவிர மற்ற காட்சிகளை கடகடவென முடித்துவிட்டு எடிட்டிங் அனுப்பி விடலாம் என முடிவு செய்திருக்கிறாராம்.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட 75 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என கூறப்படுகிறது. முக்கியமான காட்சியாக கருதப்படும் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும், தனுஷ்கோடியில் இந்த காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். இதில் சமுத்திரக்கனியும் இயக்குநர் மாரிமுத்துவும் (எதிர்நீச்சல் குணசேகரன்) அண்ணன் தம்பிகளாக வருகின்றனர். அவர்கள்தான் படத்தின் வில்லன்களாக இருக்கிறார்கள். இவர்களையும் விட மிகப் பெரிய வில்லன்களும் படத்தில் உண்டு. மொத்தம் 7 வில்லன்களாம்.

இப்படி பல விசயங்கள் படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறதாம். படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்ய நினைக்கிறது படக்குழு. இது கமல்ஹாசன், ஷங்கர் ஆகியோருக்கு மேலும் அவசியமான ஒன்றாகும். கமல்ஹாசன் அடுத்து நடிக்கப்போகும் மணிரத்னம் படத்துக்கு இந்த படத்தின் வெற்றி மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தரும். மேலும் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியில் வெற்றியை பெற நினைக்கிறார். முன்னதாக வெளியான 2.0 படம் ஹிந்தியில் சக்கை போடு போட்டது. ஆனால் ரஜினியே நடித்திருந்தும் தமிழில் பெரிய அளவில் போகவில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்