இந்தியன் 2 வெட்டப்பட்டது இந்த காட்சிதானா?
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் 15 நிமிடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது எந்த காட்சி என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் நிகழ்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது இந்தியன் 2 திரைப்படம். கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஜூலை 12ம் தேதி ரிலீஸாகியது இந்தியன் 2 திரைப்படம்.
சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடிவேணு, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் மூன்றாவது பாகமான இந்தியன் 2 அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியன் 2 திரைப்படத்துக்கே போதுமான வரவேற்பு கிடைக்காத நிலைதான் இருக்கிறது.
ஓபனிங் நன்றாக இருந்தாலும் முதல் மூன்று நாட்களில் ஏகபோகமாக ரசிகர்கள் வருகை தரவில்லை. இதற்கு காரணம் முதல் காட்சியிலேயே நெகடிவ் விமர்சனங்களைத் தாங்கி கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பரவலாக பலரிடமும் சென்றடைந்தது. பலரும் இதை போயி திரையரங்குகளில் காண வேண்டுமா என முடிவு செய்ததால் பெரிய கூட்டங்கள் நகர்புறங்கள் தவிர்த்த இடங்களில் காண முடியவில்லை. நகரங்களில் இந்த திரைப்படம் நன்றாக ஓடி வருகிறது.
படத்தில் கமல்ஹாசனின் மேக்கப் சரியாக இல்லை, படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்தது, கதையே இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லை உள்ளிட்ட பல எதிர்மறை விமர்சனங்கள் மக்களிடையே இருந்தது. இதில் அனைவருமே சொல்லி வைத்தாற்போல சொன்னது படத்தின் நீளம்தான்.
படம் 3 மணி நேரம் என்பதால் படம் மிகவும் தொய்வாக இருக்கிறது. இதனால் 2.30 மணி நேரமாக குறைத்தால் படம் கொஞ்சம் வேகமானது போல தெரியும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை ஏற்கனவே கமல்ஹாசன், அனிருத், எடிட்டர் உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்த நிலையில், ஷங்கர் இந்த விசயத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார்.
வழக்கமாக ஷங்கர் படங்கள் 3 மணி நேரங்களுக்கும் அதிகமான நேரம்தான் இருக்கும். இதுவரை அவரை எந்த படமும் இப்படி ஏமாற்றியதில்லை. அந்த தன்னம்பிக்கையில் அவர் படத்தின் நீளத்தை குறைக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதேநேரம் படத்தினை 2 பாகங்களாக வெளியிடுவதற்கு கமல்ஹாசன் முதலில் சம்மதிக்கவே இல்லையாம். ஷங்கருக்கும் இதில் முதலில் ஈடுபாடு இல்லை என்றாலும், லைகா தரப்பில் சொன்னதால் படத்தை இரண்டு பாகங்களாக பிரித்துள்ளனர். முதல்பகுதியை இந்தியன் 2 எனவும் அடுத்த பகுதியை இந்தியன் 3 எனவும் வெளியிட முடிவு செய்தனர்.
எங்கு சறுக்கியது?
படம் ஏப்ரல் மாதமே தயாராகிவிட்ட நிலையிலும் சில பணிகளை இழுத்து ஜூன் வரையிலும் வெளியிட முடியாதபடி ஆக்கிவிட்டது படக்குழு. கொஞ்சம் விரைந்து முடித்து இந்த படத்தை ஏப்ரல், மே மாதங்களில் ஒன்றில் ரிலீஸ் செய்திருந்தால், படத்தை ஒரே பாகமாக வெளியிட்டிருந்தால் படம் பிச்சிக்கொண்டு ஓடியிருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.
15 நிமிட காட்சிகள் நீக்கம்
இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து 15 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கிறதாம் படக்குழு. அது எந்த காட்சி என ரசிகர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இண்டர்வெல் காட்சியில் எதிரியை குதிரை மாதிரி ஓடச் செய்து கொலை செய்வார் இந்தியன் தாத்தா. அந்த காட்சி போகும் போகும் போய்க்கொண்டே இருக்கும் அந்த காட்சியில் கத்தரிப்போட வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல இஸ்ரோ இடத்தில் பறந்துகொண்டே நடித்த காட்சியும் மிக நீளமானதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். அந்த காட்சியையும் மிகவும் குறைத்திருக்கலாம் என அவர்கள் விரும்புகின்றனர்.
இதேபோல இந்தியன் தாத்தா கிளைமேக்ஸில் வீலிங் செய்து போகும் காட்சி 25 நிமிடங்கள் வருகிறதாம். அதனையும் குறைக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படக்குழு கிளைமேக்ஸ் காட்சியில் 10 நிமிடங்கள் குறைத்துள்ளதாகவும், மற்ற இடங்களில் ஆங்காங்கே கத்தரித்து மொத்தமாக 5 நிமிடங்கள் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை முதல் கட் செய்யப்பட்ட காட்சிகள் இல்லாமல் திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படத்தைக் காண முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu