இயக்குநர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன்-2' விரைவில் தொடக்கம்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 விரைவில் தொடக்கம்..!
X

நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர்.

'விக்ரம்' வெற்றிச் சாதனையைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் 'இந்தியன்-2' உருவாகவிருக்கிறது.

பிரமாண்ட இயக்குநர் என்றாலே, அது இயக்குநர் ஷங்கரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பிறமொழிப் பட உலகிலும் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

தமிழில் கமல், ரஜினி, விக்ரம், அர்ஜுன், சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நாயகர்களை வைத்து பிரமாண்டத் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்து மிரள வைத்தவர். வசூலில் தெறிக்கவிட்டவர். அதேபோல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப்படங்களிலும் மாஸ் காட்டியவர்.

அவர், ஏற்கெனவே, கமலுடன் 'இந்தியன்-2' படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகளும் படத்திற்கான முன்னெடுப்புகளும் தொடங்கி பிறகு, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், அண்மையில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் வெளியாகி மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, வசூலிலும் கடந்தகால சாதனைகளையெல்லாம் முறியடித்து முன்னணியில் வரிசைகட்டிக் கொண்டிருக்கிறது.

இத் தருணத்தில்தான், 'இந்தியன்-2' குறித்த அதிகாரபூர்வமான தகவலைத் தெரிவித்துள்ளார் கமல். 'விக்ரம்' சக்ஸஸ் மீட் நடத்தி முடித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இயக்குநர் ஷங்கரும் நானும் 'இந்தியன்-2'-வை நிச்சயம் விரைவில் கொண்டுவருவோம். படம் பண்ணுவது குறித்து எங்கள் ரசிகர்களைக் காட்டிலும் நாங்கள் இருவருமே உற்சாகமாக இருக்கிறோம்.

தற்போது, இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் 'RC 15' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்தவுடன் 'இந்தியன்-2' படத்துக்கான படவேலைகள் முழுவீச்சுடன் தொடங்கும்" என்றார். இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த 'இந்தியன்' முதல் பாகம் 1996-ல் வெளியாகி 'அரசியல் த்ரில்லர்' படமாக மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்