இந்தியன் 2 கிளைமாக்ஸ் சண்டை இந்த ஊர்லதான் எடுக்குறாங்களாம்!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் முடியப் போகிறது. கடைசியாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படம்பிடிக்கப் போகிறார்களாம் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்தேறி வருவதால், படம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலேயே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படத்தில் திட்டமிடப்பட்ட நாட்களிலிருந்து 20 முதல் 30 நாட்களுக்கு முன்னமே ஷூட்டிங் முடியப் போகிறதாம். முன்பை விட அதிக கவனத்தை ஷங்கர் இந்தியன் 2 மீது செலுத்தி வருவதால் படத்தை திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே திரைக்கு கொண்டு வந்துவிட நினைக்கிறார்களாம்.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட இன்னும் பல நடிகர் பட்டாளே நடித்துள்ள படம் இந்தியன் 2. பல பிரச்னைகளுக்கு இடையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக முடிவடையப் போகுது. காலை 7 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுகிறார்களாம். இரவு 7 மணி வரைக்கும் நீட்டித்து படத்தை எடுக்கிறார்கள் என்றும் அப்படி படப்பிடிப்பு நடத்த முடியாத நேரங்களில் படம் சம்பந்தமான மற்ற வேலைகளில் பிஸியாகவே இருக்கிறார் ஷங்கர்.
இந்தியன் 2, ராம்சரண் படம் இரண்டையும் மாறி மாறி செய்து வந்தவருக்கு இப்போது கொஞ்சம் ரிலீஃப் ஆனது போல கியாரா அத்வானிக்கு திருமணம் நடந்து அவர் விடுமுறையில் இருக்கிறார். ராம் சரணும் ஆர் ஆர் ஆர் படக்குழுவுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். கமல்ஹாசன் வரும் நாட்களில் அவரே இறங்கி வந்து எல்லா காட்சிகளையும் எடுக்கிறார் என்கிறார்கள். கமல்ஹாசனுடன் காம்பினேசன் உள்ள நடிகர்களின் கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தி அனைத்து காட்சிகளையும் மார்ச் மாதம் முடிவதற்குள் முடித்துவிட்டால், அவர் தவிர மற்ற காட்சிகளை கடகடவென முடித்துவிட்டு எடிட்டிங் அனுப்பி விடலாம் என முடிவு செய்திருக்கிறாராம்.
வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட 75 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என கூறப்படுகிறது. முக்கியமான காட்சியாக கருதப்படும் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும், தனுஷ்கோடியில் இந்த காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். இதில் சமுத்திரக்கனியும் இயக்குநர் மாரிமுத்துவும் (எதிர்நீச்சல் குணசேகரன்) அண்ணன் தம்பிகளாக வருகின்றனர். அவர்கள்தான் படத்தின் வில்லன்களாக இருக்கிறார்கள். இவர்களையும் விட மிகப் பெரிய வில்லன்களும் படத்தில் உண்டு. மொத்தம் 7 வில்லன்களாம்.
ராம்சரணும், கியாரா அத்வானியும் திரும்பி வருவதற்குள் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டால், எடிட்டிங் டேபிளில் ரிலாக்ஷாக உக்கார்ந்து வேலை பார்க்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ராம்சரண் படமும் முக்கியமான காட்சிகள் முடிக்கப்பட்டு மற்ற காட்சிகளுக்காகவே காத்திருக்கிறது. இதனால் இந்தியன் 2 படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஷங்கர். ராம்சரண் படம் அரசியல் கண்டென்ட் என்பதால், 2024ம் ஆண்டு தேர்தல் ஜூரம் வந்த பிறகே ரிலீஸ் செய்கிறார்கள்.
இதனால் 2024 பொங்கல், சங்கராந்தி தினத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்து கல்லா கட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் கூடுதல் அவகாசம் இருக்கிறது. மேலும் இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தாலும் படம் சீக்கிரம் முடிந்தால் முன்னதாகவே வெளியிடும் ஐடியாவும் இருக்கிறதாம். ஒருவேளை சரஸ்வதி பூஜை நாட்களில் வருமோ?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu