தளபதி 67 குறித்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய அப்டேட்

தளபதி 67 குறித்த லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய அப்டேட்
X
thalapathy 67 release date - இயக்குனர் லோகேஷ் கனகராஜ், செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

thalapathy 67 release date - நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு விஜய் தயாராகி விட்டார். தளபதி 67 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 ஆம் தேதி (நேற்று) சென்னையில் தொடங்கியது.

தளபதி 67 படப்பிடிப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இயக்குனர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்த அப்டேட்டை தெரிவித்திருந்தார். அவரது இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகியது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய்யின் முதல் படமான மாஸ்டர் நல்ல வரவேற்பை அளித்தது. 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் தளபதி 67 படத்திற்காக இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.

thalapathy 67 release date 2023

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்து, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. வித்தியாசமான சிறு கதையுடன் இதை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியில் மும்முரம் காட்டி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விக்ரமுக்குப் பிறகு, தளபதி 67 படத்திற்கான ஸ்கிரிப்ட்டில் லோகேஷ் பணியாற்றினார். விரைவில் நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் மன்சூர் அலிகான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மட்டுமின்றி தளபதி 67 படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அடுத்த 10 நாட்களில் தளபதி 67 பற்றி எக்ஸ்குளோசிவ் அப்டேட்டை கொடுக்க உள்ளதாகக் கூறியுள்ளார். அந்த அறிவிப்பு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் கூறுகையில் படம் என்பது ஒரு போக்குதான். எனவே இதற்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!