திருமணம் ஆகாமல் கர்ப்பமான பிரபல தமிழ் நடிகை

திருமணம் ஆகாமல் கர்ப்பமான பிரபல  தமிழ் நடிகை
X

இன்ஸ்டகிராமில் இலியானா வெளியிட்ட புகைப்படம். 

Ileana D'Cruz announces pregnancy with a sweet post-நடிகை இலியானா டி குரூஸ் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருப்பது இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Ileana D'Cruz announces pregnancy with a sweet post-நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இருப்பினும் தமிழில் அவருக்கு போதுமான வரவேற்பு இல்லாததால், தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் டைரக்ட்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழுக்கு மீண்டும் ரீ எண்டிரி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை இலியானா தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முதல் புகைப்படம், 'அதனால் சாகசம் தொடங்குகிறது (sic)' என்ற வார்த்தைகளுடன் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்." மற்றொரு புகைப்படத்தில் இலியானா 'அம்மா' என்று எழுதப்பட்ட டாலர் அணிந்திருப்பதைக் காட்டுகிறது.

இந்த பதிவிற்கு, "விரைவில் வருகிறேன். உங்களை சந்திக்க காத்திருக்கவில்லை என் குட்டி அன்பே (sic)" என்ற தலைப்பில் கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் இலியானாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலர் தந்தை யார் என்பதை அறிய ஆவலாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் இலியானா டேட்டிங் செய்வதாக பல ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இருப்பினும், இலியானா தற்போது வரை அவரது ரிலேஷன்ஷிப் குறித்து இதுவரை எதுவும் தெளிவாக தெரிவிக்கவில்லை. தற்சமயம் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்-பின் தம்பியுடன் இலியானா டேட் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story