இளையராஜா - யுவன்சங்கர் ராஜா இசையில் தமிழுக்கு வருகிறார் நாகசைதன்யா..!

இளையராஜா - யுவன்சங்கர் ராஜா இசையில் தமிழுக்கு வருகிறார் நாகசைதன்யா..!
X

பைல் படம்.

நடிகர் நாகசைதன்யா தனது 22வது படமாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.

தெலுங்குப் படவுலகின் முன்னணி இளம் கதாநாயகனான நடிகர் நாகசைதன்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகும் இப்படம் நாகசைதன்யாவின் 22வது படமாகும். மேலும், நாக சைதன்யாவுக்கு இது நேரடியாக தமிழில் அறிமுகமாகும் முதல் படமும் கூட. இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு, இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'மாநாடு', 'மன்மதலீலை' படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படமாக நாக சைதன்யாவின் இப்படம் அமைகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!