சோப்பு விற்றுப் பிழைக்கிறேன்..! - நடிகை ஐஸ்வர்யா கண்ணீர்

சோப்பு விற்றுப் பிழைக்கிறேன்..! - நடிகை ஐஸ்வர்யா கண்ணீர்
X
நடிகை ஐஸ்வர்யா தற்போது பெரிய திரை, சின்னத்திரை என எதிலும் வாய்ப்பு இல்லாததால், சோப்பு விற்றுப் பிழைக்கிறேன் என்றார்.

நடிகை லட்சுமியின் மகளான நடிகை ஐஸ்வர்யா 90களில் தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர். அதன்பிறகு, சில ஆண்டுகளில் நாயகி வாய்ப்பு குறைய வில்லி, குணச்சித்திர வேடங்கள் மற்றும் கௌரவ வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு முற்றிலுமாக படவாய்ப்புகள் இல்லாத நிலைமயில் ஐஸ்வர்யாவுக்கு சின்னத்திரைதான் கை கொடுத்தது. சின்னத்திரையில் பிசியான ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் அங்கும் வாய்ப்புகள் குறைந்து, அதன்பிறகு முற்றிலுமாகவே, வாய்ப்புகள் இல்லாத சோதனையான சூழலில் சிக்கித்தவிக்கலானார்.

இந்தநிலையில், ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், "நான் இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், வருமானம் இன்றி இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லாததால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல சம்பளம் கிடைத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன்.

நான்கு பூனைகளுடன் தனியாகத்தான் வாழ்கிறேன். யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன், ஆனால், இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும், நான் பிழைத்தது சீரியலை வைத்துத்தான், சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது." என்று கண்ணீரோடு தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!