/* */

"நான் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன்..!" - நடிகர் மகேஷ் பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, 'விக்ரம்' படம் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

HIGHLIGHTS

நான் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன்..! - நடிகர் மகேஷ் பாபு
X

நடிகர் கமல்ஹாசன், நடிகர் மகேஷ்பாபு.

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' முப்பது நாட்களைக் கடந்து உலகமெங்கும் உள்ள திரையரங்கங்களில் ரசிகர்களின் உற்சாகத்தோடு முன்னேற்ற வெற்றியில் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

கமல்ஹாசனோடு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இன்னமும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு மழை பொழிந்தவண்ணம் உள்ளது.

இந்தநிலையில், தெலுங்குப் பட உலகின் முன்னணி நாயகனான நடிகர் மகேஷ் பாபு அண்மையில், 'விக்ரம்' படத்தைப் பார்த்துவிட்டு ஏகத்துக்கும் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், " விக்ரம் ஒரு ப்ளாக் பஸ்டர் சினிமா. நவீன காலத்தின் மிகச் சிறந்த படைப்பு. இந்தப் படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டு அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன். 'விக்ரம்' மெய் மறக்கச் செய்யும், உணர்ச்சிப்பூர்வமான படம்.

சகோதரர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுகள். 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியும், ஃபஹத் ஃபாசிலும் அற்புதமாக நடித்திருந்தார்கள். இதற்கு மேல் சிறப்பாக நடிக்கவே முடியாது என்கிற அளவுக்கு அவர்களது உழைப்பு இருந்தது. சிறந்தவொரு பின்னணி இசையை அனிருத் கொடுத்துள்ளார். 'விக்ரம்' பட பாடல்கள் என்னுடைய ப்ளே லிஸ்ட்டில் நீண்ட காலம் இருக்கும்.

கடைசியாக லெஜெண்ட் கமல்சாரைப் பற்றி. அவரைப் பற்றி விமர்சனம் எழுத எனக்கு தகுதி கிடையாது. அவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற அடிப்படையில் இது எனக்கு பெருமை மிகுந்த தருணம். கமல்சார் உங்களுக்கும், உங்களது டீமுக்கும் வாழ்த்துகள் சார்" என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 July 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  2. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  4. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  5. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  7. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  8. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  9. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  10. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...