இளையராஜாவின் இசையில் நடிப்பதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்: நாக சைதன்யா
பைல் படம்.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ என்கிற ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்து முடித்துள்ளார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, ராம்கி, சம்பத்ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, பிரேமி விஸ்வநாத் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்த நடிகர் நாக சைதன்யா, அந்த இனிமையான நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பகிர்ந்திருந்தார் “இசைஞானி இளையராஜா சாரை சந்தித்தபோது எனது முகத்தில் பேரானந்தம். அவருடை இசை, அவரது பாடல்கள் என்னை வாழ்க்கையின் பல பயணங்களுக்கு அழைத்துச் சென்றன. பலமுறை அவரது இசையை மனதில் வைத்து பல காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் தற்போது என்னுடைய ‘கஸ்டடி’ படத்திற்கே அவர் இசையமைத்துள்ளார். இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது, உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் வருகிற மே 12 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் சூழலில், தற்போது இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீநிவாஸா சித்தூரி நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா, நாக சைதன்யா சந்திப்பு நிகழ்ந்த போட்டோகளை பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு போஸ்ட் செய்யப்பட்ட சிலமணி நேரங்களிலேயே வைரல் ஆனதோடு, லைக்குகளையும் அள்ளி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu