அசோக் செல்வனின் ஹாஸ்டல் பட பிரஸ்மீட் இன்னிக்கு
வெங்கட் பிரபு டைரக்ஷனில் அசோக் செல்வன் நடித்த படம், மன்மதலீலை. இந்தப் படம் சமீபத்தில் வெளியாச்சு. இதை அடுத்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம், `ஹாஸ்டல்'. இதில் அவர் ஜோடியா, பிரியா பவானி சங்கர் நடிச்சிருக்கார். இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்ட் செஞ்சிருக்கார். போபோ சஷி இசையமைக்கிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செஞ்சிருக்கார்.
மலையாளத்தில் வெளியான படத்தின், தமிழ் தழுவல் இது. கொஞ்சம் விளக்கமா சொல்ரதானால் மலையாளத்தில் 2015-ல் வெளியான படம், அடி கப்பியாரே கூட்டமணி. கப்பியார் என்றால் தேவாலயத்தின் வேலைகளை கவனிப்பவர். தமிழகத்தில் உபதேசி அல்லது டீக்கனார். ஏதாவது அவசர செய்தி என்றால் மக்களை ஒன்று திரட்ட கோயில் மணியை தொடர்ச்சியாக அடிப்பார்கள். அதற்கு பெயர் கூட்டமணி.
ஜெண்ட்ஸ் மட்டுமே வசிக்கும் கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் ஹீரோயின், அந்த ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நாயகனின் உதவியுடன் உள்ளே வருகிறாள். இரவே திரும்பிவிடுவது நோக்கம். ஆனால், அசந்து தூங்கிப் போய் ஹாஸ்டலில் மாட்டிக் கொள்கிறாள். மறுநாள் காலையும் அவளால் வெளியேற முடியவில்லை. அதற்குள் கல்லூரி ஸ்டிரைக் என்று விடுமுறை விட, அனைத்து மாணவர்களும் ஹாஸ்டலுக்கு வந்துவிடுகிறார்கள். அன்றிரவும் நாயகி ஹாஸ்டலில் தங்க வேண்டியதாகிறது. நாயகனின் நண்பர்கள் அவளை மறைத்து வைக்க உதவுகிறார்கள். அன்றிரவும் நாயகியால் வெளியேற முடியாமல் போகிறது. அதேநேரம், வெளியே நாயகியின் தந்தை வெறிகொண்டு மகளை தேடிக் கொண்டிருப்பார். முழுக்க நகைச்சுவையில் தயாரான அந்தப் படத்தில் நாயகியாக நமிதா பிரமோத்தும், நாயகனாக தயன் ஸ்ரீனிவாசனும், நண்பர்களாக அஜு வர்க்கீஸ் மற்றும் நீரஜ் மாதவும் நடித்திருந்தனர். கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் ஆல்ஃபிரட் காட்டுவிளையில் கதாபாத்திரத்தில் முகேஷ் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை யார் யாரோ தமிழில் ரீமேக் செய்வதாக சேதி பரவிய நிலையில் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவீந்திரன் ஒரு வழியா தயாரிச்சிருக்கார். தமிழ் வெர்சனில் நாசர், சதிஷ், முனிஸ்காந்த், ரவிமரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிச்சிருக்கும் இப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்க்கும் நிலையில் இன்று பிரஸ் மீட்டுக்கு இருக்குது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu