தமிழில் வெளிவந்த பேய் படங்கள்: தனியா பாக்காதீங்க
Pei Padam Tamil Movie List
Pei Padam Tamil Movie List-தமிழில் பேய்ப்படங்கள் என்றாலே நமது நினைவுக்கு வருபவர் விட்டாலாசாரியார் தான். தொழில்நுட்பம் குறைவாக இருந்த காலத்திலேயே அவர் ஜகன்மோகினி, மாய மோதிரம் போன்ற பேய்ப்படங்களை இயக்கியிருந்தார்.
அதன் பின்னர் தமிழில் பலவேறு திகில் பேய்ப்படங்கள் வந்துள்ளது.
இந்த திகில் படங்கள் பட்டியல் இதோ
மை டியர் லிசா: 1987ஆம் ஆண்டு வெளியான மை டியர் லிசா மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் படம் போலவே இருந்ததால் வெற்றி பெற்றது. மை டியர் லிசா பேய்ப் படங்களின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு மிக பயங்கரமாக இருந்கும்.
ஜென்ம நட்சத்திரம்: ஒரு குழந்தையும், குழந்தைக்கு துணையாக வரும் வேலைக்காரியும் செய்யும் பயங்கரம் தான் இப்படத்தின் கதை. தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல். கதாநாயகனின் மனைவியின் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர் தெரிவிக்கிறார். வேறு குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுக்கிறார்கள். அந்த குழந்தை தனது வளர்ப்பு பெற்றோர்களை அழித்து விட்டு புதிய உறவினர்களுடன் செல்கிறது. ஆங்கில படத்துக்கு இணையாக இருக்கும்.
13ம் நம்பர் வீடு: ஒரு புது வீட்டிற்கு குடி வரும் அண்ணன், தம்பி கொண்ட குடும்பத்தார். முதலில் தாத்தா மர்மமான முறையில் இறக்கிறார். பின்னர் அண்ணன் இறக்கிறார். அந்த வீட்டில் திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வீட்டில் நடந்த பழைய சம்பவங்கள் அடிக்கடி தெரிகின்றன. அந்த குடும்பத்தின் முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாக இருக்கிறார். அந்த பெண் அனைத்து ஆண்களையும் பழி வாங்குவதாக சபதம் செய்து பலி வாங்குகிறாள். இதுவும் மிக பயங்கரமான பேய் படங்களில் ஒன்று.
வா அருகில் வா: திகில் படம் பார்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம். இக்கதையில் வரும் நாயகி வாழ்க்கையில் கெட்ட சக்தியினால் அவள்படும் இன்னல்களும், துன்பங்களும் திகிலோடும் சுவாஸ்யத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது. தீய சக்தியினால் அவள் செய்யும் கொலைகள் அதிலிருந்து அவள் எப்படி மீண்டு வருகிறாளா இலையா என்பதை சொல்லும் படம்.
உருவம்: உருவம் படம் வயது வந்தோருக்கான திகில் திரைப்படம். இந்த படம் 1991ல் வெளிவந்தது. இதனை ஜி. எம். குமார் இயக்கினார். உருவம் படத்தில் மோகன், பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 15 மார்ச் 1991 இல் வெளிவந்தது. மோகன் பேயாக நடித்து பெரும் பெயர் பெற்றார். குலை நடுங்கவைக்கும் படம்.
நாளைய மனிதன்: ஒரு அறிவியல் சோதனை நிகழ்த்தும் ஆராய்ச்சி மருத்துவர் தான் கண்டு பிடித்த மருந்தை ஒரு கொலைகாரன் மீது செலுத்துகிறார். பின்னர் அந்த கொலைகாரன் அழிக்கமுடியாத சக்தியாக வருகிறான். கொலைகாரன் பற்றிய ரகசியங்கள் ஆராயும் ஒரு போலீஸ்காரர் அவனது சக்தியை பற்றி உணர்கிறார். கிணறுக்குள் அவன் தள்ளப்பட்டு மூடப்படுகிறான். இத்துடன் இந்த படம் முடிகிறது.மீண்டும் இரண்டாம் பாகம் வந்தது. பிரபு நடித்திருக்கும் இந்த படமும் மிகவும் பயமுறுத்தியது.
அதிசய மனிதன்: கௌதமி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பங்களாவுக்கு வந்து தங்குகின்றனர். விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அழிக்க இயலாத மனிதன் சாவில் இருந்து உயிருடன் வந்து ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்கிறான். பிசாசு போன்ற அந்த மனிதன் ஒவ்வொருவரையும் கொள்ளும் காட்சிகள் பயங்கரம். சிறப்பு போலீஸ் அதிகாரியான நிழல்கள் ரவி ஒரு லேசர் துப்பாக்கி மூலம் எப்படி கொள்கிறார் என்பதே கதை.
இது தவிர சில பேய் படங்கள் குழந்தைகளையும் கவரும் வகையில் நகைச்சுவை படங்களாகவும் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நகைச்சுவை பேய் படங்களுக்கு வரவேற்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இங்கு தமிழில் வெளிவந்த சில நகைச்சுவை பேய் படங்கள்
முனி
பேய் என்றாலே பயந்து கதறி அழக்கூடிய ஒரு இளைஞன் ஒருவருக்கு பேய் பிடிக்க, பின்னர் பேய்யின் கதைகேட்டு மனமிறங்கி பேய்க்கு உதவுகிறார். இக்கதைகளத்தை பயமுடன் நகைச்சுவையை சேர்த்து வெற்றிப்படமாக வந்தது
யாமிருக்க பயமே
திகிலான பேய் திரைப்படத்தினை நகைச்சுவையாகவும், திகிலாகவும், மசாலா படம் என அனைத்து கண்ணோட்ட ரசிகர்களையும் கவரும் வகையிலான திரைக்கதையில் வெற்றியைடைந்த திரைப்படமாகும்.
அரண்மனை
ஒரு குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அக்குடும்பத்தை பழிவாங்கும் படலத்தை நகைச்சுவையுடன், மசாலா மற்றும் விறுவிறுப்பாக திரைக்கதை வடிவமைப்பில் உருவான திரைப்படமாகும்.
டார்லிங்
வாழ்க்கையை வெறுத்த ஒரு நால்வர் தற்கொலை செய்துகொள்ள ஒரு வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு இருக்கும் பேயிடம் மாட்டிக்கொள்ளும் இவர்கள் எவ்வாறு தப்பிக்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட படம்
காஞ்சனா 2
முனி திரைப்பட வரிசையில் ஒரே திரைக்கதை அம்சத்தை மையமாக கொண்டு உருவான திரைப்படமாகும்,
ஜாக்சன் துரை
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இறந்தபோன விடுதலைக்கு பாடுபட்டவர்கள் ஒரு மாளிகையில் இன்னும் ஆவியாக விடுதலைக்கு போராடுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா என்பதை நகைச்சுவையாக கூறப்பட்ட படம்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- pei padam tamil movie list
- tamil pei padangal
- pei movie tamil
- pei padam pei padam pei padam
- pei padam movie
- pei padam tamil movie
- Pei Padangal
- a padam tamil pei padam
- pei movie tamil list
- pei tamil movie
- pei movie
- pei padam videos
- pei padam full movie tamil
- pei padam tamil full movie
- pei padangal
- pei padam full movie
- digal padam
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu