இந்தி பேசப்போகும் 'சூரரைப்போற்று'..! இதில் சூர்யா யார்..?

நடிகர் சூர்யா- அக்ஷய் குமார்.
Surya Double Action Movies - நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார். மூன்று நிமிடக் காட்சியானாலும் அது, அரங்கையே அதிரவைத்த ரகளையான காட்சியாக அமைந்தது.
இந்தநிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாகத் தொடங்கிவிட்டார் சூர்யா. இதனிடையே கோவாவுக்கு குடும்பத்துடன் ஒரு சின்ன ரிலாக்ஸ் டூரும்.
அதோடு, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து 'சூரரைப்போற்று' படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று' கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் இந்தி பேசப்போகிறது என்பதுதான் சூர்யாவின் ரசிகர்களுக்கு தித்திப்புச்செய்தி.
இந்தியில் இந்தப் படத்தில், அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார். இந்தி ரீமேக்கில் சூர்யா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் அக்ஷய் குமாருடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள சூர்யா, "அக்ஷய் சார் உங்களை இந்தப் படத்தில் வீரராகப் பார்ப்பது எனக்குப் பழைய நினைவுகளை நியாபகப்படுத்துகிறது. நம் கதையை மீண்டும் உயிர்ப்பித்து மிக அழகாக சுதா கொங்கரா உருவாக்கியுள்ளார். 'சூரரைப் போற்று' பட இந்தி ரீமேக்கில் எனது சிறப்புத் தோற்றத்தையும், இந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக செலவு செய்கிறேன்" என்று மகிழ்ச்சிப் பதிவை பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்ஷய் குமார், "நன்றி பிரதர், 'சூரரைப்போற்று' போன்ற ஒரு உத்வேகக் கதையின் படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்தையும் விரும்புகிறேன். எங்களின் ஸ்ட்ரிக்ட் கேப்டன் சுதா கொங்கரா இருந்தாலும் சென்னையில் இருப்பது ஒருவகையான காதலை வெளிப்படுத்துகிறது" என்று பதில் பதிவிட்டு, தனது அன்பை வழியவிட்டுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu