கர்நாடகாவிற்கு 'ஹை அலர்ட்': பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூட உத்தரவு

கர்நாடகாவிற்கு ஹை அலர்ட்: பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூட உத்தரவு
X
கர்நாடகாவில் புனித் ராஜ்குமார் கவலைக்கிடமான நிலையில் 'ஹை அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் நெஞ்சுவலியால் மருத்துவமைனயில் கவலைிக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இவர் பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். கர்நாடகா முழுவதும் நடிகர் ராஜ்குமாருக்கு ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கர்நாடகத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீஸ் பட்டாலியன்கள் குவிக்கப்பட்டனர்.

மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை உடனடியாக மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!