ஹீரோயின் வேஸ்ட்… டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..!

ஹீரோயின் வேஸ்ட்…  டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..!
X
நடிகர்கள் ரஜனி, விஜய், அஜித் ஆகியோரை டான்ஸில் ஒரே காட்சியில் இயக்க வேண்டும் என்பது டான்ஸ் மாஸ்டர் ஜானியின் ஆசை.

தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆண்டுதோறும் திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மரியாதைக்குரிய விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் அதிரடி காட்டிவரும் தென்னிந்திய முன்னணி நடனக் கலைஞரான டான்ஸ் மாஸ்டர் ஜானியை கௌரவித்து, 'சிறந்த நடன இயக்க'த்துக்கான விருதினை அவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் 'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது தனது பிறந்தநாளுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில், கேக் எடுத்து வந்து வெட்டிக் கொண்டாடிய நிகழ்வை விழா மேடையில், அனைவரிடமும் நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டார் டான்ஸ் மாஸ்டர் ஜானி. அப்போது அவரிடம், "மாஸ்டர், அப்போ உங்களது அடுத்த பிறந்தநாளை அஜித் குமாருடன் கொண்டாடுவீர்களா..?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய, ஜானி மாஸ்டர், "அஜித் சாருடன் பணிபுரிய மிகவும் ஆர்வமாக உள்ளேன்.. அதற்காக காத்திருக்கிறேன். நான் நடன இயக்குநராக அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடனம் ஆடுவதை இயக்க வேண்டும். அதை நீங்கள் திரை அரங்கில் காணவேண்டும். அத்துடன் அதில் ஒரு சிறப்பான பிண்ணனி இசையில் ரஜினி சார் வந்து நடனம் ஆட வேண்டும். இந்த மூவருடனும் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை… கனவு.

இவர்கள் மூவரும் திரையில் தோன்றும்போது அவர்களோடு ஹீரோயின் தேவையில்லை. அப்போது, ரசிகர்கள் ஹீரோயினைப் பார்க்க மாட்டார்கள். எனவே, அக்காட்சியில் ஹீரோயின் வேஸ்ட்" என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!