ஹீரோ யோகிபாபு… தொடங்கியது 'மெடிக்கல் மிராக்கல்'..!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் 'மெடிக்கல் மிராக்கல்' படத்துவக்க விழா.
Yogi Babu New Movie Name - பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் காலங்களில் இருந்தே நகைச்சுவை நடிகர்கள் நாயகர்களாக நிறம் மாறுவது என்பது நிகழ்ந்து வரும் ஒன்றுதான். ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் நாயகனான பின்பு மீண்டும் நகைச்சுவை நடிகராக திரும்பாமல் நாயகனாகவே தொடரும் மனப்பாங்கைக் கொள்வதுண்டு.
ஆனால், நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு 'தர்மபிரபு', 'மண்டேலா', 'கூர்கா' போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் முன்னணி கதாநாயகர்களுடன் நகைச்சுவை நடிகராக வாய்ப்பு வந்தால் மறுக்காமல் அதனையும் ஏற்று நடித்து வருகிறார்.
ஓ.டி.டி.,யில் வெளியான 'மண்டேலா' படம் நன்றாகவே ஓடியது. அப்படத்தில் யோகிபாபுவின் நடிப்பு அனைவரது மத்தியிலும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தற்போது, 'மெடிக்கல் மிராக்கல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனாக யோகிபாபு நடிக்க உள்ளதால், அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்' படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் கே-வின் இயக்கத்தில் உருவாகும் படம்தான் 'மெடிக்கல் மிராக்கல்'. முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஜான்சன். கே. ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் நாயகனான நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். இவர் 'தாண்டவம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu