மனோரமா-வுக்கு பர்த் டே-ஸ்பெஷல் ரிமைண்டர் ரிப்போர்ட்-இன்ஸ்டாநியூஸ் டீம்

மனோரமா-வுக்கு பர்த் டே-ஸ்பெஷல் ரிமைண்டர் ரிப்போர்ட்-இன்ஸ்டாநியூஸ் டீம்
X
ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகை மனோரமாவின் மனோரமாவின் பிறந்த நாள் இன்று.

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் காசி கிளாக்குடையர் ராமாமிர்தம் தம்பதியின் மகனாக 1937ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பிறந்தார்.அண்ணாதுரை கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் முதல்வர் ஆவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தனர் அவர்களுடன் மனோரமா நடித்துள்ளார், சினிமாவில் அடி எடுத்து வைத்த பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் திறனை வெளிப்படுத்தினார் எம்ஜிஆர் சிவாஜி ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

#ஸ்பெஷல் ரிமைண்டர் ரிப்போர்ட் By @இன்ஸ்டாநியூஸ் ஸ்பெஷல் டீம்...

நடிப்பிலே 'பெண் சிவாஜி' என பெயரெடுத்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா நடிக்காத கேரக்டர்களே இல்லை. 80,90 களில் மனோரமாவை விட்டால் அம்மா, குணச்சித்திர கேரக்டர்களுக்கு வேறு யாரும் இல்லை என சொல்ல வைத்தவர்.தமிழ் சினிமாவில் அம்மா வேடத்தில் அதிகமாக நடித்த நடிகை என்ற சாதனையை படைத்தார்.சிவாஜி,எம்ஜிஆர், ரஜினி,கமல்,விஜய்,அஜித், சூர்யா, விஷால் வரை இந்த தலைமுறை நடிகர்கள் வரை நடித்தவர்.

தமிழ் சினிமாவில் பொன்விழா கண்ட பெண் ஆளுமை. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா,என்.டி.ராமாராவ் என ஐந்து முதலமைச்சர்களோடு நடித்த நடிகை என்ற பெருமையும் அடைந்தவர். அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். 2002ல் 'பத்ம ஸ்ரீ 'விருது, 1989ல் புதிய பாதை படத்திற்காக 'சிறந்த துணை நடிகை'க்கான 'தேசிய விருது', மலேசிய அரசின் 'டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி' விருது, கேரள அரசின் 'கலாசாகர் விருது','வாழ்நாள் சாதனையாளர் விருது', தமிழக அரசின் 'கலைமாமணி விருது','எம்ஜிஆர் விருது','ஜெயலலிதா விருது' ஆகிய விருதுகளை அள்ளியவர்

தனது கடந்த காலத்தை பேட்டி யொன்றின் போது மனோரமா சொன்னது தான் இது.


"நான் எங்க அம்மாவின் கதையைக் சொல்லணும், ஏதோ காரணத்திற்காக எங்க அம்மாவோட தங்கையை எங்க அப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் தங்கையே அம்மாவை, நான் பத்துமாதக் குழந்தையாக இருந்த போது வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். நம்ப முடியலை இல்லையா ஆனா நம்பித்தான் ஆகணும். கையில் கைக்குழந்தையுடன் எங்கே போவது என்று தெரியாமல் சுற்றித் திரிந்து... தற்கொலை முடிவெடுத்து... பின் என்னைப் பார்த்து மனம் மாறி எப்படியோ பள்ளத்தூர் வந்து சேர்ந்தாங்க அம்மா.அங்கே ஒரு அம்மா எங்கம்மாவை ஆதரித்து அங்கிருந்த செட்டியார் வீட்டில் வேலையில் வைத்தார்கள். அதில்தான் என்னை வளர்த்தாங்க. நிறையச் சிரமங்கள், வலியுடன்தான் வளர்ந்தேன்.

படிக்கும் போதே மேடை நாடகங்களில் பாட்டுப்பாடி வந்தேன். இந்நிலையில் கோட்டையூரில் அண்ணாமலை செட்டியார் தலைமையில் செட்டியார்கள் ஒன்று கூடி 'அந்தமான் கைதி' என்ற படத்தை ஏகாதசிக்காக நாடகமாக நடத்தினார்கள். அதில் பாடுவதற்குச்சென்றேன். அந்த நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவரின்தம்பி கதை வசனம் எழுதி ஒரு நாடகம் தயாரித்தார். அதில் நாயகியாக நடிக்க வைத்தார். அந்த நாடகத்திற்குத் தலைமை எஸ். பாலசந்தர். அந்தக் காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. மேடை நாடகத்தில் தெரிந்தவர்கள் நடிக்கிறார்கள் என்றால் வேண்டியவர்கள் பழமோ, ஏதாவது பொருளோ வாங்கி வந்து கொடுப்பார்கள். நாடகத்தில் நடித்ததற்காக இல்லை. தெரிந்தவர்கள் என்பதற்காக.

அப்படி அந்த நாடகத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த காந்திமதி என்பவருககு பரிசு வாங்கிக் கொண்டு வந்து ஒருவர் கொடுக்கச் சொன்னார். அதற்கு பாலசந்தர் "என்னைக் கொடுக்கச் சொன்னீங்கன்னா இ ந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குத்தான் கொடுப்பேன். நீங்க, இப்போ என்னை காந்திமதிக்கு கொடுக்க சொல்லுங்க. நீங்க சொல்றிங்க என்பதற்காகக் கொடுக்கிறேன்" என்றார்.அதன் பிறகு எனக்கு நல்ல பேர் கிடைத்தது. அந்த கற்று வட்டாரத்தில் 150 கி. மீ. வரை எந்த நாடகமாக இருந்தாலும் மனோரமாவை கூப்பிடுங்க என்று சொல்வார்கள்.

அப்படி, இப்படி தப்பி சினிமாவில் கதாநாயகியாகத்தான் நடிக்க வந்தேன். "மாலையிட்ட மங்கை" படத்தில்தான் முதன் முதலில் நடித்தேன். அப்போது கண்ணதாசன் கூப்பிட்டு காக்கா ராதாகிருஷ்ணன் ஜோடியாக உனக்கு ஒரு ரோல் கொடுத்திருக்கிறேன் என்றார். என்ன ரோல் என்றேன். நகைச்சுவை கதாபாத்திரம் என்றார். எனக்கு நகைச்சுவையாக நடிக்கத் தெரியாதே எப்படி நடிப்பது என்றேன். அப்போ அவர் சொன்னார். நீ கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தால், ரெண்டு வருஷமோ அல்லது மூணு வருஷமோ நடிக்கலாம். அதுக்கு மேல் உன்னை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க இந்த நகைச்சுவை வேஷத்துல நடிக்க ஆரம்பித்தால், வாழ்க்கை பூராவும் நடிக்கலாம் என்றார்.

சரி என்று அந்தப் படத்தில் நடித்தேன். கவிஞர் வாக்கு பலிச்சிடுச்சு. மக்களுக்கு அது பிடித்திருந்தது. அதன் பிறகு அபலை அஞ்சுகம் என்ற படம் நடித்தேன். அதிலும் கொமெடி ரோல். மெட்ராஸ் பாஷை பேசணும். நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். அதனால் எனக்கு ¦ட்ராஸ் பாஷை தெரியல்ல. அந்தப் படத்திற்கு ஏ. எல். நாராயணன் வசனம், அவர்சொல்லிக் கொடுத்தபடியே பேசினேன். அந்தப் படத்திற்குப் பிறகு அப்படியொரு பேர் கிடைத்தது.

அப்போ இருந்த பத்திரிகை ஒன்றில் பேசும் படமா, குண்டூசியா என்று ஞாபகம்இல்லை. அதில் இம்மாத நட்சத்திரம் மனோரமா என்று எழுதியிருந்தார்கள். அதன்பிறகு நடித்த எல்லாப் படங்களிலும் தொடர்ந்து எனக்கு நல்ல வரவேற்பு அதன்பிறகு வெரைட்டி மெட்ராஸ் பாஷை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, பிராமண பாஷை என எல்லா தமிழும் சரளமாய் பேசுவேன். அறிஞர் அண்ணா, கலைஞர், எம். ஜி ஆர்., என். டி. ராமராவ், ஜெயலலிதா என 5 முதல்வர்களுடனும் நடித்திருக்கிறேன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!